ஏகாதசி பொதுவாக மகா விஷ்ணுவை வணங்கி அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு மிகச் சிறந்த நாளாகும். ஏகாதசி என்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கை நல்ல குடும்பம் பிரச்சனை இல்லாத கடன் இல்லாத வாழ்க்கை என அனைத்தையும் தருவதாக அவரே பகவத் கீதையில் குறிப்பிட்டிருக்கிறார். வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் அது வருடம் முழுக்க விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. பதினோராவது திதியில் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான நல்ல பலன்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசி விரதங்கள் வரும். ஒரு வருடத்தில் வரக்கூடிய 24 ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி க்கு அமலாகி ஏகாதசி என்று பெயர்.
இந்த 2024 ஆம் வருடம் மார்ச் 20 ஆம் தேதி எப்பொழுதும் போல் மகா சிவராத்திரிக்கும் ஹோலி பண்டிகைக்கும் இடையில் இந்த அமலாகி ஏகாதசி வருகிறது. ரங்பாரி ஏகாதசி என்று அழைக்கப்படும் இந்த ஏகாதசி நாளில் விஷ்ணுவை மட்டுமல்லாமல் சிவன் பார்வதியையும் வழிபட்டால் மிகவும் சிறந்தது. இந்த ஒரு சிறப்பான நாளில் பெருமாளை வழிபட்டால் நமக்கு என்னவெல்லாம் பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அமலாகி ஏகாதசி அன்று பெருமாளை வழிபடும் முறையும் அதற்கான பலன்களும்
அமலாகி ஏகாதசி என்று பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உங்கள் திறமைகள் வெளிப்பட்டு நீங்கள் நல்ல நிலையை அடைவீர்கள்.
துளசி அன்னை மற்றும் மகாலட்சுமி தேவிக்கு குங்குமத்தால் அபிஷேகம் செய்தால் கணவர் மற்றும் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக வாழ்வார்கள்.
இந்த அமலாகி ஏகாதசி அன்று ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து உணவு அளித்தால் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பெருமாள் நீக்குவார்.
இந்த நன்னாளன்று அரச மரத்திற்கு அடியில் நெய் தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் அந்த மரத்திற்கு அடியில் இணைந்து இருப்பது போல் மனதார நினைத்து வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
அமலாகி ஏகாதசி அன்று வெற்றிலையில் ‘ஓம் மகா விஷ்ணுவே நமஹ’ என்று எழுதி மாலையாக கட்டியோ அல்லது அந்த இலைகளை வைத்து பெருமாளுக்கு நேரடியாக பூஜை செய்து வழிபட்டால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். மேலும் அந்த வெற்றிலைகளை மறுநாள் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்திலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து விட வேண்டும்.
ஸ்ரீமத் பாவதம் படித்து பெருமாளை அமலாகி ஏகாதசி அன்று வழிபட்டால் மிகவும் சிறந்தது.
இதனையும் படியுங்கள் : ஒன்னுமில்லாத வெறும் பர்ஸ்சில் கட்டு கட்டாக பணம் சேர! வெறும் ஒரு பிரியாணி இலை இருந்தால் போதும்!