பெரும்பாலான நபர்கள் என்ன தான் மணி பர்ஸ் வைத்திருந்தாலும் அதில் பணத்தை பார்ப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான். அப்படியே அவர்களது பர்ஸ்சுக்கு பணம் வந்தாலும் அந்த பணம் ஏதாவது ஒரு வழியில் செலவாகிக் கொண்டே இருக்கும் இந்த நிலைமையில் தான் பலர் இன்றளவும் இருக்கின்றார்கள். அதிகபட்சமாக அவர்கள் பர்ஸ்சில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லரை நாணயங்கள் தான் கிடைக்கும். அதற்கு மேல சில காடுகள் மட்டும் வைத்திருப்பார்கள் இப்படி ஒன்றும் இல்லாத மணி பர்ஸ்சில் கூட காசுகள் நிறைய வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் நீங்கள் சரியாக செய்து பாருங்கள் உங்கள் பர்ஸ்சில் பணம் குவிய தொடங்கி விடும்.
தேவையானவை
இப்படி ஒன்னுமில்லாத உங்கள் பர்ஸசில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக நாம் செய்யப் போக இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு ஒரு பிரியாணி இலை மற்றும் ஸ்கெட்ச் பென் அல்லது பேனா இந்த இரண்டு பொருட்கள் மட்டும் தேவைப்படும். அதனால் இந்த இரண்டையும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் நான் சொல்ல போகும் இந்த பரிகாரத்தை சந்தேகம் மட்டும் இல்லாமல் முழு நம்பிக்கையுடன் மட்டும் செய்து பாருங்கள் உங்கள் பர்ஸ்சில் எப்படி பணம் சேர்கிறது என்பதை பார்த்து நீங்களே ஆச்சர்யபடுவீர்கள்.
பரிகாரம்
இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட பிரியாணி இலை எந்தவித ஒட்டையும், கிழிசலும் இல்லாமல் முழுமையாக இருக்க ணே்டும். சில கடைகளில் பிரியாணி இலை பச்சை நிறத்தில் கூட கிடைக்கும் எந்த பிரியாணி இலை எடுத்துக் கொண்டாலும் அது கிழியாமல், முழுமையான இலையாக இருந்தால் மட்டும். அப்படி நாம் வைத்திருக்கும் பிரியாணி இலையில் நீல நிற பேனாவை அல்லது ஸ்கெட்ச் பென்னை பயன்படுத்தி “ஸ்ரீம்” என்ற மந்திர வார்த்தையை எழுத வேண்டும். இந்த ஸ்ரீம் என்ற வார்த்தை மகாலட்சுமி தயாருக்கு சொந்தமான ‘பிஜ’ மந்திரம் ஆகும்.
மகாலட்சுமி தாயாரை வேண்டி
இந்த பீஜ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் மகாலட்சுமிக்கு சொந்தமான இந்த பிஜ மந்திரத்தை நீங்கள் வைத்திருக்கும் பிரியாணி இலையில் எழுதிய பின்பு மனதார மகாலட்சுமி தேவைி அல்லது உங்கள் குலதெய்வத்தையும் நினைத்து ஒன்னும் இல்லாத உங்க பர்ஸ்சில் பணம் சேர வேண்டும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டி கொண்டு. இந்த மந்திர வார்த்தை எழுதிய பிரியாணி இலையை உங்கள் பர்ஸ்சில் வைத்து விடுங்கள் சிறிது நாட்களிலேயே உங்கள் பார்சல் பணம் சேர்ந்து கொண்டு இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
பணம் வைத்து எடுக்கும் இடம்
இதை போன்று இந்த பிரியாணி இலையில் பிஜ மந்திரத்தை எழுதி நாம் பல வகையில் பயன்படுத்தலாம். அதாவது முதலில் எழுதியது போலவே பிரியாணி இல்லையே ஸ்ரீம் என்ற மந்திரத்தை எழுதிவிட்டு மகாலட்சுமி தேவி அல்லது உங்கள் குல தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு நீங்கள் எழுதி வைத்திருக்கும் பிரியாணி இலையை உங்கள் வீட்டில் நீங்கள் பணம் வைத்து இருக்கும் இடத்தில் வைக்கலாம். அதே போல் நீங்கள் தங்க நகை வைக்கும் இடத்திலும் இந்த இலைய வைக்கலாம். நீங்கள் இந்த இலையை எங்கெல்லாம் வைக்கிறீர்களோ அங்கெல்லாம் மகாலட்சுமி தேவியின் அம்சம் நிறைவாக இருக்கும். அதனால் உங்கள் வீட்டில் பணமும் தங்கமும் சேர்ந்து கொண்டே இருக்கும் நீங்கள் வீட்டின் சமையலறையில் வைத்தால் கூட வீட்டில் இருக்கும் தானியங்களுக்கு பஞ்சம் வராது.
சம்பள உயர்வு, பதவி உயர்வு
இந்த தாந்திரீக பரிகாரத்தை வீட்டில் உள்ள ஆண் பெண் யாராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இப்படி இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் உங்களின் மாத வருமானம் அதிகரிக்கும் நீங்கள் வேலை தேடும் நபராக இருந்தால் நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கூட கிடைக்கும். இந்த பரிகாரத்தை நீங்கள் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் செய்வது சிறப்பானதாக இருக்கும்.
பெருமாள் கோவில்
மேலும் உங்களுக்கு பெருமாள் கோவில் செல்லும் அளவிற்கு நேரம் இருக்கிறது என்றால். நீங்கள் பிரியாணியி இலையில் ஸ்ரீம் என்ற வார்த்தை எழுதுவதை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று அங்கு வைத்து எழுதி அந்த பிரியாணி இலையை வீட்டிற்கு கொண்டு வந்து பரிகாரம் செய்யும் போது அதனுடைய சக்தி அபரிவிதமாக இருக்கும். மேலும் நீங்கள் இப்படி எழுதி வைத்த இலை முற்றிலும் கிழிந்து விட்டது, பழையதாக ஆகிவிட்டது என்றாலும் புதியதாக ஒரு இலையில் எழுதி மறுபடியும் அதே இடத்தில் வைக்கலாம். முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நீங்களே எதிர்பாக்காத அளவிற்கு பலன் கிடைக்கும்.