மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். இத்தனை மாதங்கள் தொடர்ந்து வந்த சம்பளம் கூட, இந்த மாதம் வராமல் சிலருக்கு பிரச்சனை கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை சரி கட்ட முடியாமல் திண்டாடுவீர்கள். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருக்காதீங்க. தினம் தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து கவலை கொடுக்கும். ராத்திரியில் படுத்தால் நிம்மதியான தூக்கம் இருக்காது. அதனால் அடுத்த நாள் வேலையை சரியாக செய்ய முடியாத சூழ்நிலை. இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. உங்கள் மனசு கொஞ்சம் குழம்பி போய் தான் இருக்கும். வாராகி அம்மன், பிரத்தியங்கிரா தேவி, போன்ற அம்மன் தெய்வ வழிபாடு மனக்குழப்பத்தை நீக்கி தெளிவை பிறக்க வைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. எதிலும் அவசரப்படக்கூடாது. வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் கடன் கொடுக்காதீங்க. கடனும் வாங்காதீங்க. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பொறுமை காக்கவும். தினமும் அங்காளம்மன் வழிபாடு நன்மையை தரும்.
கடகம்
உங்கள் வேலையை மட்டும் நீங்க பார்த்துகிட்டு இருந்தாலும், உங்களை சண்டைக்கு இழுக்க ஒரு கும்பல் காத்துக்கொண்டே இருக்கும். நீங்கள் என்ன பேசினாலும் அது குற்றம் குறை சொல்லும். குறிப்பாக சொந்த பந்தங்களுக்கு இடையே வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருந்துக்கோங்க. யாரையும் அனாவசியமாக ஒரு வார்த்தை சொல்லி திட்டிடாதீங்க. நீங்கள் தான் பிரச்சனை என்று ஊர் உலகமே உங்களைத்தான் கைநீட்டி பேசும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலை செலுத்துவது நன்மையை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன கஷ்டங்கள் வந்து போகும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் உண்டாகும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்க மாட்டார்கள். பெரிய அளவில் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. இந்த வார இறுதியில் அந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டிவிடலாம். மற்றபடி வேலை செய்யும் இடத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்கள் உதவி செய்வார்கள். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று இரண்டு நல்லெண்ணெய் விளக்கு போடுங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக இருக்கப் போகின்றது. எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டீர்கள். எதிரிகளை சூரசம்காரம் செய்யும் அளவுக்கு உங்களுடைய தகுதி உயர்ந்துவிடும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மேலதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்தால் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். இந்த வாரம் 9, 10 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம். அம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து வழிபாடு செய்வது நன்மையை தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி தொலைபேசியின் மூலம் வந்து சேரும். நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த, நீங்கள் விரும்பிய அந்த நல்ல வேலை கிடைக்கப் போகின்றது. கை நிறைய சம்பளம் கிடைக்கும். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆடை ஆபரண அணிகலன்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு ஏதாவது ஒரு அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான நன்மைகளை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டு. இருசக்கர வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமைந்து, ஒரு தொகையானது கைக்கு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோகமான வாரமாக தான் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறாது. சின்ன சின்ன தோல்விகளை சந்திப்பீர்கள். மனக்குழப்பம் ஏற்படும். ஆனால் பிரச்சினையிலிருந்து விடுபட போராடுவீர்கள். பேசியே காரியத்தை சாதித்துக் கொள்ளப் போகிறீர்கள். இந்த கஷ்டம் எல்லாம் உங்களுக்கு ஒரு பாடம்தான். நிறைய அனுபவத்தை இந்த வாரம் உங்களுக்கு கற்றுத் தரும். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு வேலையை தொடங்குங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பேறித்தனமான வாரமாக இருக்கும். எல்லார் மேலையும் கோபப்படுவீர்கள். எல்லாரையும் திட்டுவீர்கள். அதனால் உங்களை பார்த்தால் வீட்டில் இருப்பவர்கள் பயந்து எட்டடி தூரம் ஓடி விடுவார்கள். முன்கோபத்தை குறைப்பது நல்லதுக். யார்கிட்டயும் வம்புக்கு போகாதீங்க. மனக்கவலை அதிகரிக்கும். இந்த முன்கோபம் உங்களுக்கு வரக்கூடிய நல்லதை எல்லாம் தட்டி கழித்து விடும் சாக்கிரதை. தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன மன சஞ்சலங்கள் ஏற்படக்கூடிய வாரமாக தான் இருக்கும். சின்ன சின்ன தவறுகளை செய்துவிட்டு பிறகு, ஏன் தான் இந்த தவறை செய்தோமோ என்று வருத்தப்படுவீர்கள்.நீங்க எப்பவும் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் போலத்தான் மற்றவர்களும். பேசும்போது அடுத்தவர்களுடைய மனது புண்படாதபடி பேசுங்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மனதை அமைதி படுத்த உங்களுக்கு பிடித்த அம்மன் பெயரை 108 முறை சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக தான் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது என்ற குழப்பம் இருக்கும். பரவாயில்லை, எல்லாவற்றையும் சமாளிக்கும் தெம்பு உங்களிடத்தில் உள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கை கொடுக்க நாலு பேர் நிச்சயம் வருவார்கள். காரணம் நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.