வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் வார்க்கும் பொழுது ரொம்பவே ருசியான தோசை ஆரோக்கியமான முறையில் சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த வாழைப்பழம் கோதுமை தோசை அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.அந்த வகையில் கோதுமை தோசை அப்பம் சுடுவது போல ருசியாக வருவதற்கு எளிதான முறையில் எப்படி வாழைப்பழம் கோதுமை தோசை தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
எப்போதும் அரிசி மாவு உளுந்து மாவு போட்ட தோசையை சாப்பிட்டு போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள் வீட்டில் வாழைப்பழமும், கோதுமை மாவும் இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த இன்ஸ்டன்ட் தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ருசி தரும் அந்த தோசை ரெசிபி என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம் கோதுமை தோசை | Wheat Banana Dosa Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 வாழைப் பழம்
- 1/2 கப் கோதுமை மாவு
- 1 ஸ்பூன் அரிசி மாவு
- 3 ஸ்பூன் ரவை
- கப் வெல்லும்
- 1 ஸ்பூன்1 ஏலக்காய்தூள்
- உப்பு சிட்டிகை
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பாத்திரத்தில் வாழைப் பழத்தை எடுத்து தோல் நீக்கி, துண்டுகளாக்கிய பின் மத்தால் நன்கு மசித்து கொள்ளவும்.
- பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கரைந்ததும் இறக்கி ஆற வைத்ததும்,சுத்தமாக வடிகட்டி மசித்த வாழைப்பழத்துடன் சேர்க்கவும்.
- மேலும் அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து, அப்படியே அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர்தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை சுற்றிலும் தடவியபின், கலந்து வைத்த மாவை ஊற்றவும். தோசைகளாக சுற்றி வெந்ததும்,
- தோசை சுற்றி வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு, தோசையின் சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும், எடுத்து பரிமாறினால் ருசியான வாழைப்பழம் கோதுமை தோசை ரெடி