ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

- Advertisement -

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சத்தான எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நான் இது போன்ற சாட் உணவுகளோடு சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளை இணைத்துச் சாப்பிடுவது சிறந்த வழியாகும். இன்று ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து தரக்கூடியது என்றால் அது சிறுதானியன்களே. இன்றைய நவீன உலகத்தில் நூடுல்ஸ் வடிவிலும் சிறுதானியங்கள் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சிறுதானியத்தில் ஒன்றான ராகி வைத்து ராகி நூடுல்ஸ் செய்வதை காண உள்ளோம். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் அதிகரித்து விட்டன. அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றால் பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்பி வரவேண்டும்.

- Advertisement -

துரித உணவுகளில் ஒன்றான நூடுல்ஸை குழந்தைகள் மட்டுமல்லாது இளைஞர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். நூடுல்ஸ் உடலுக்கு கெடுதி எனினும் ஊட்டசத்து மிக்க ராகி கொண்டு செய்யப்படும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏதும் இல்லை. கால்சியம் சத்து அதிகம் நிறைந்த இந்த ராசி, உடல் உஷ்ணத்தை நீக்கும், உடல் வலிமையை அதிகப்படுத்தும், எலும்பு வலிமை, ரத்த சோகை போக்குதல், மலச்சிக்கல் சிக்கலை நீக்குதல், தைராய்டு கட்டுப்பாடு, பால் சுரப்பு என பல்வேறு விதமான நன்மைகளைக் கொடுக்கும்.மேலும் இந்த ராகி நூடுல்ஸ் ரெசிபியில் பல்வேறு காய்கறிகளும் சேர்த்து சமைக்க படுவதால் வயதானவர்களுக்கும் இது ஏற்ற ஒரு சிற்றுண்டி எனலாம்.

Print
4 from 1 vote

ராகி வெஜ் நூடுல்ஸ் | Ragi Veg Noodles Recipe In Tamil

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சத்தான எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நான் இது போன்ற சாட் உணவுகளோடு சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளை இணைத்துச் சாப்பிடுவது சிறந்த வழியாகும். இன்று ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து தரக்கூடியது என்றால் அது சிறுதானியன்களே. இன்றைய நவீன உலகத்தில் நூடுல்ஸ் வடிவிலும் சிறுதானியங்கள் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சிறுதானியத்தில் ஒன்றான ராகி வைத்து ராகி நூடுல்ஸ் செய்வதை காண உள்ளோம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Ragi Veg Noodles
Yield: 3 People

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் ராகி நூடுல்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 10 பீன்ஸ்
  • முட்டைக்கோஸ் சிறிதளவு
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ராகி நூடுல்சை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் பாதி வெந்ததும் நூடுல்ஸை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், மிளகு‌ தூள், வினிகர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து உடையாமல் கலந்து விடவும்.
  • மிதமான தீயிலேயே மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வைத்து நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி வெஜ் நூடுல்ஸ் தயார்.

Nutrition

Serving: 350g | Carbohydrates: 7.6g | Protein: 7.7g | Fat: 1.3g | Sodium: 10mg | Potassium: 587mg | Fiber: 16.5g | Vitamin A: 2.84IU | Calcium: 350mg | Iron: 3.9mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ராகி அன்னாசிபழ பூரணம் கொழுக்கட்டை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!