Advertisement
ஆன்மிகம்

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

Advertisement

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு வளரும் என்பது பொருள். அந்த வகையில் அட்சய திருதியை என்று நாம் வாங்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் வளர்ந்து கொண்டே தான் போகும். அட்சய திருதியை அன்று நாம் செய்யும் செயல்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

2024 அட்சய திருதியை

அட்சய திருதியை சித்திரை மாதத்தில் சுக்லபட்சத்தில் 14வது நாள் கொண்டாடப்படுகிறது. அள்ள அள்ள குறையாத அட்சய திருதியை இந்த ஆண்டு மே பத்தாம் தேதி காலை 4.17 மணிக்கு திருதியை திதி தொடங்கி மே 11ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது.

Advertisement

அட்சய திருதியை அன்று நகை வாங்க உகந்த நேரம்

அட்சய திருதியை அன்று மே பத்தாம் தேதி காலை 5.33 மணியிலிருந்து மதியம் 12.18 வரை தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். லட்சுமி தேவியின் ஆசிர்வாதமும் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு கிடைக்கும்.

உயரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை அன்றிலிருந்து இன்று முதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Advertisement
எனவே அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி வாங்கலாமா என்ற கேள்வி வரும். ஆம் அந்த நாள் என்று தங்க நகைகள் வாங்க முடியாதவர்கள் வெள்ளி நகைகளும் வாங்கலாம். வெள்ளி பாத்திரங்கள் வெள்ளி நகைகள் என எது வாங்கினாலும் மிகவும் சிறப்பானதாகவே கருதப்படும்.
Advertisement

ஐஸ்வர்யத்தை கொடுக்கும் வெள்ளி

பண்டைய காலங்களில் எல்லாம் தங்க நகைக்கு பதிலாக வெள்ளி நகைகளையும் தங்க பாத்திரங்களுக்கு பதிலாக வெள்ளி பாத்திரங்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் எனவே வெள்ளியும் தங்கத்திற்கு ஈடாக சிறப்பை கொண்டது. எனவே வெள்ளி பொருட்களை நாம் வாங்குவதும் கூட மிகவும் சிறப்பானது தான் அது ஐஸ்வர்யத்தையும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் நமக்கு கொடுக்கும். எனவே அக்ஷய திருதியை என்று தங்க நகைகள் வாங்க முடியாதவர்கள் வெள்ளி நகைகளை வாங்கி லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.

இதனையும் படியுங்கள் : அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு கிரகங்கள் கூறும் ரகசியம்

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

40 நிமிடங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

3 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

13 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

24 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago