- Advertisement -
விதவிதமாக மாலை நேரத்தில் சாப்பிட நினைத்தாலும் வடை சாப்பிடுவது போல் வராது. மாலை நேரத்தில் அதுவும் இந்த பனிக்காலத்தில் சூடாக எதாவது சாப்பிட தோன்றும் நாம் சாப்பிடுவது அனைத்தும் உளுந்துவடை, போண்டா, பஜ்ஜி தான், ஆனால் வடையில் நிறைய வகைகள் உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவுல் வடை கேள்வி பட்டிருக்கீர்களா.
இதையுமா படியுங்கள் : இட்லி மாவு இருக்க அப்போ 5 நிமிடத்தில் மெது வடை இப்படி செய்து பாருங்க!
- Advertisement -
அவள் வைத்து பாயசம் சாப்பிட்டிருக்கேன் இது என்ன புதுசாக இருக்கும் என்று யோசிப்பது எனக்கு தெரிகிறது. சரி வாங்க அது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்..!அதனால் இன்று இந்த அவுல் வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சுவையான அவல் வடை | Aval Vadai Recipe in Tamil
விதவிதமாக மாலை நேரத்தில் சாப்பிட நினைத்தாலும் வடை சாப்பிடுவது போல் வராது. மாலை நேரத்தில் அதுவும் இந்த பனிக்காலத்தில் சூடாக எதாவது சாப்பிட தோன்றும் நாம் சாப்பிடுவது அனைத்தும் உளுந்துவடை, போண்டா, பஜ்ஜி தான், ஆனால் வடையில் நிறைய வகைகள் உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவுல் வடை கேள்வி பட்டிருக்கீர்களா. அவள் வைத்து பாயசம் சாப்பிட்டிருக்கேன் இது என்ன புதுசாக இருக்கும் என்று யோசிப்பது எனக்கு தெரிகிறது. சரி வாங்க அது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்..!
Yield: 5 People
Calories: 113kcal
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் அவல்
- 2 Tbsp கடலை மாவு
- 2 Tbsp அரிசி மாவு
- 1 பெரிர வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
- 1 Tsp சீரகம்
- 2 பச்சை மிளகாய் நறுக்கியது
- 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
- 1/2 Tbsp மிளகாய் பொடி
- 1 கைப்பிடி கருவேப்பிலை
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- அவுள் வடை செய்வதற்கு முதலில் அவுளை 15 நிமிடம் ஊறவைக்கவும். வெங்காயத்தை வடைக்கு நறுக்குவது போல் நறுக்க வேண்டும்.
- பின்பு பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி அனைத்தையும் சிறிதாக நறுக்கி தனியாக வைக்க வேண்டும்.
- முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஊறவைத்த அவுளை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் இருந்தால் எண்ணெய் அதிகமாக தேவைப்படும்.
- பின்னர் இப்போது அந்த அவுலுடன் கடலை மாவு, அரசி மாவு, வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மல்லி இலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ள வேண்டும்.
- அடுப்பை பற்றவைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும். கையில் வடையை தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.சுவையான அவுள் வடை ரெடி.
Nutrition
Serving: 150G | Calories: 113kcal | Carbohydrates: 46g | Protein: 23g | Saturated Fat: 1g | Sodium: 8mg | Potassium: 71mg | Fiber: 2g | Sugar: 0.1g | Calcium: 1.1mg