- Advertisement -
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு மீதமான இட்லி, தோசை மாவு இருந்தாலே போதும் மொறு மொறுனு ருசியான மெதுவடை செய்து விடலாம்.
-விளம்பரம்-
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் யாரும் வேண்டானே சொல்ல மாட்டாங்க அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மெது வடை | Medu Vada Recipe In Tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு மீதமான இட்லி, தோசை மாவு இருந்தாலே போதும் மொறு மொறுனு ருசியான மெதுவடை செய்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- இட்லி மாவு
- 1½ ஸ்பூன் ரவை
- 3 டீஸ்பூன் கடலை மாவு
- 1½ ஸ்பூன் அரிசி மாவு
- 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
- உப்பு தேவைக்கேற்ப
- மஞ்சள் தூள் சிறிதளவு
- பேக்கிங் சோடா சிறிதளவு
- ½ டீஸ்பூன் மிளகு
- கொத்தமல்லி இலை நறுக்குகியது கொஞ்சம்
- பச்சை மிளகாய் காரத்திற்கேற்ப
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு பௌலில் புளித்த இட்லி மாவு வடை செய்வதற்கு தேவையான அளவு, ரவை, கடலை மாவு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் பேக்கிங் சோடா, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், சேர்த்து நன்கு கலந்து வடை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- இப்பொழுது சுவையான மெது வடை தயார்.