மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி போக்க சித்த மருத்துவம் நமக்கு தந்த மூலிகை மூங்கில் அரிசி!

- Advertisement -

அரிசி என்றதும் அனைவருக்கும் புழுங்கலரிசி, பச்சரிசிதான் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் போனால் இட்லி அரிசி, பிரியாணி அரிசிதான் தெரியும். ஆனால், நமது பாரம்பரிய அரிசி ரகங்களைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. அவற்றையெல்லாம் நாம் மறந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. கார் அரிசி, கவுனி அரிசி, சம்பா, மாப்பிள்ளைச்சம்பா அரிசி, தங்கச்சம்பா போன்றவற்றின் வரிசையில் மூங்கில் அரிசியும் உண்டு. அவற்றின் பயன்பாடு பற்றியும் நம்மில் யார் யாருக்கெல்லாம் தெரியும்? குறிப்பாக மூங்கில் அரிசி பற்றி நாம் தெரிய வேண்டியது அவசியம்.

-விளம்பரம்-

மூங்கில் அரிசி

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூ பூக்கும் மூங்கில் மரங்களின் பூவிலிருந்து வரும் காய்களையே மூங்கில் நெல், அரிசி என்கிறோம். இத்தகைய மூங்கில் அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். கொடிய, மோசமான நோய்கள் எல்லாம் விலகி ஓடிவிடும். நல்லதொரு ஆரோக்கியம் கிடைக்கும். உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும் மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாம். பழந்தமிழர்கள் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தேன், தினைமாவு போன்றவை முக்கிய உணவாக இடம் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகிறது.

- Advertisement -

உடல் வலுப்பெறும்

மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும், உடல் இறுகும். அதுமட்டுமல்ல, கொடிய நோய்களெல்லாம் விலகி ஓடிவிடும் .சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்கள் மறுபடியும் சீரான உடலமைப்பை பெறச் செய்யும் வல்லமை படைத்தது மூங்கிலரிசி. பொதுவாக, மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்து தூளாக்கி, அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர உடல் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகுவதோடு சர்க்கரை நோய் கட்டுப்படும்.

முதுகெலும்பு வலி

மூங்கில் அரிசி, நொய் அரிசி (குருணை), சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியாக ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் குருணை அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்க வேண்டும். இதைச் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்திருப்பது, முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

மூங்கில் அரிசி கஞ்சி

இந்த கஞ்சியை சாப்பிடுவதால் உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு விலகும். இது சர்க்கரையின் அளவையும் குறைக்கும். எலும்பை உறுதியாக்கி நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும். இப்படியாக பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வல்லமை படைத்தது மூங்கிலரிசி. இதேபோல் மூங்கில் அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கஞ்சி செய்தும் சாப்பிடலாம். மூங்கில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்து அதை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு குக்கர் அல்லது மண்பாத்திரத்தில் மூங்கில் அரிசி, பாசிப்பருப்பு மற்றும் சிறிது மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு சேர்த்து வேக வைத்து கஞ்சியாக காய்ச்சி இறக்கி அதனுடன் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதாலும் மேற்கண்ட பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here