பெண்களின் சுகப்பிரசவத்துக்கு சித்த மருத்துவம் தந்த அரிய மருந்து!

- Advertisement -

சீரகம்… அஞ்சறைப் பெட்டியில உள்ள முக்கியமான பொருட்கள்ல இதுவும் ஒண்ணு. வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியத்தில சீரகத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. சீரகத்துல நிறைய வகை இருக்கு. நாம அன்றாட சமையல்ல சேர்க்கக்கூடியது அளவுல சிறுசா இருக்கிற சின்ன சீரகம் இல்லன்னா… சிறு சீரகம்னு சொல்லக்கூடிய சீரகம். அடுத்தது பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச் சீரகம், சீமை பெருஞ்சீரகம்ன்னு சீரகத்துல பல வகை இருக்கு. இதுல பெரும்பாலும் நம்ம பயன்படுத்தக்கூடிய சீரகத்துல வைட்டமின் பி, ஈ சத்துகள், இரும்புச் சத்து, நார்ச்சத்துனு பல சத்துகள் இருக்கு.

-விளம்பரம்-

வயிற்றை சுத்தமாக்கி மலச்சிக்கல் போக்கும்

சீரகம்னு சொன்னதும் அது செரிமானத்துக்கு நல்லதுங்கிறது நம்மள்ல பலபேருக்கு தெரியும். சாப்பிட்ட சாப்பாடு சரியா செரிமானம் ஆகலன்னா நாலஞ்சு சீரகத்தை வாயில போடுன்னு பெரியவங்க சொல்வாங்க உண்மையிலே சாப்பிட்ட பிறகு சீரகத்தை வாயில போட்டு மென்னு சாப்பிட்டாலே எல்லாம் சரியாயிரும். அது மட்டுமில்லாம சீரகத்தை தண்ணியில போட்டு கொதிக்கவச்சி அதைக் குடிச்சிட்டு வந்தாலும் சாப்பாடு செரிமானமாகும். சீர் அகம்… அகத்தை அதாவது வயித்துல உள்ள உள் உறுப்புகளை சுத்தம் பண்ணக்கூடியது. சுத்தம் பண்றது மட்டுமில்லாம அதை அப்படியே வெளியேத்திரும். நார்ச்சத்து இருக்கிறதால மலச்சிக்கல் பிரச்சினை இல்லாம பார்த்துக்கிடும். ஆக, செரிமானத்தை சரிபண்றதோட வயிறை சுத்தம் பண்ணி அதை வெளியேத்துற வேலையையும் சீரகம் பண்ணுது.

- Advertisement -

சுவாசக்கோளாறை சரிபண்ணும்

உடல் இயக்கம் ஒழுங்கா நடக்குறதுக்கு சீரகம் ரொம்பவே உதவியா இருக்கும். இந்தமாதிரி இருக்கிறதால உடம்புல நோய் எதிர்ப்பு அதிகமாகும். அதோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை சீரகத்துக்கு இருக்கிறதால நோய் பாதிப்புகள் எதுவும் வராது. ரத்த சர்க்கரையோட அளவை குறைக்கக்கூடிய தன்மையும் சீரகத்துக்கு உண்டு. சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் நல்லது. ஆனா, சீரகம்னு சொன்னதும் அது குளிர்ச்சியானதுன்னு மக்கள் சொல்வாங்க. உடல் உறுப்புகளை குளிர்ச்சிப்படுத்தி சளி சேராம பார்த்துக்கிடும். உடம்பு சூட்டாலதான் சளி பிடிக்குங்கிற உண்மை தெரியாம பலபேர் பேசுறாங்க. உள் உறுப்புகள் உள்ள சூட்டை சீரகம் குறைக்கும்கிறது யதார்த்தம்.

பித்தப்பைக்கு பாதுகாப்பு

ரத்த அழுத்தப் பிரச்சினையை சரி பண்றதுக்கும் சீரகம் ரொம்ப நல்லது. முக்கியமா அதுல உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுது. அதே மாதிரி வளர்சிதை மாற்றத்துக்கும் இது உதவும். நச்சுக்களை வெளியேற்றி பித்தப்பைக்கு பாதுகாப்பு கொடுத்து கல்லீரலை பலப்படுத்துறதுக்கும் சீரகம் உதவியா இருக்கும். இன்னைக்கி சூழல்ல கல்லீரல் பிரச்சினையால கஷ்டப்படுற பலபேர் இருக்காங்க. ரொம்ப சாதாரணமா விலை குறைவா கிடைக்கிற இந்த சீரகத்தை பயன்படுத்தி கல்லீரலை பாதுகாக்க வழி இருக்கும்போது அதை அப்பப்போ சாப்பிடுறது நல்லது.

சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்

கர்ப்ப காலத்துல சீரகம் சாப்பிடுறது ரொம்ப நல்லது. ஏன்னா கர்ப்பிணிகளுக்கு செரிமானக்கோளாறு அதிகமா இருக்கும். அதை சரிபண்றதுக்கு சீரகம் உதவியா இருக்கும். சுகப்பிரசவம் ஆகணுன்னா கர்ப்பமான ஒன்பதாவது மாசத்துல சீரகத்தை வெண்ணெய்கூட சேர்த்துச் சாப்பிடணும். சீரகத்தை மையா அரைச்சி ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து வெண்ணெய் சேர்த்து முதல் மூணு நாள் சாப்பிடணும். அதுக்கு அப்புறமா மூணு நாள் சாப்பிடக்கூடாது. அடுத்து மூணு நாள் சாப்பிடணும். இந்தமாதிரி சாப்பிட்டு வந்தா சுகப்பிரசவமாகும். குழந்தை பெத்த பிறகும் சீரகத்தை அப்பப்போ சாப்பிட்டு வந்தா குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கும். சீரகத்துக்கு தாய்ப்பாலை சுரக்க வைக்கிற தன்மை இருக்கு.

-விளம்பரம்-

வாய்வுத்தொல்லை போக்கும்

செரிமான பிரச்சினையை சரி பண்ற இந்த சீரகம் வாய்வுத்தொல்லையையும் சரி பண்ணும். செரிமானத்துல கோளாறு உண்டான அது வாய்வையும் அதிகரிக்கும். வாய்வுத்தொல்லை இருந்தா தலை சுத்திக்கிட்டு நிறைய பிரச்சினைகள் வரும். அந்த நேரத்துல சீரகத்தை கொதிக்க வச்சி குடிக்கலாம். இல்லன்னா கால் ஸ்பூன் சீரகத்தை வாயில அள்ளிப்போட்டு வெதுவெதுப்பான தண்ணியை குடிச்சிட்டு வந்தா போதும். சீரகம் நல்லதுதான்… ஆனா அதை அளவோட சாப்பிடணும். சில பேர் அடிக்கடி சீரகத்தை வாயில அள்ளிப்போட்டு சாப்பிடுவாங்க. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுங்கிறதை புரிஞ்சிக்கோங்க. சீரகமும் அப்பிடித்தான் அளவுக்கு மீறி சாப்பிட்டா இப்ப எந்தந்த பிரச்சினைகளை சரிபண்ணுதோ அதை உண்டுபண்ணவும் செய்யும். அதனால கவனமா இருக்கணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here