கருஞ்சீரகம் ஒரு மூலிகைத் தாவரம். இது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜீரகா, உபகுஞ்சீரகா என்றும், ஆங்கிலத்தில் Black cumin என்றும், இந்தியில் காலாஜீரா என்றும் அழைக்கப்படுகிறது. இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள் அந்த அளவுக்கு இதில் பல நன்மைகள் ஒளிந்துள்ளன.
கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
உடல் எடையை குறைக்க
கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கருஞ்சீரகம் தீர்வாக அமையும். அதனால் கருஞ்சீரகத்தை தேனீர் போட்டு கூட பருகலாம். இதனால் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.
நினைவுத்திறன் அதிகரிக்க
கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. கருஞ்சீரகம் மற்றும் எண்ணெய் இரண்டும் ஆக்ஸிஜனேற்றிகளாக நமது உடலில் செயல்படுகின்றன.
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பினை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகின்றது.
புற்றுநோயை தடுக்க
இந்த காலத்தில் எல்லோரையும் மிரட்டும் நோயாக புற்றுநோய் உள்ளது. நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறோம். புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்கள் உள்ளன. இவை உடல் சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சீர் செய்யவும் பேருதவி புரிகிறது.
கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
கருஞ்சீரகத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது தொடர்ந்து எடுத்துக்கொண்டாலோ உடலுக்கு பல வியாதிகளையும் தருகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதனை கர்ப்பிணிகள், குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள், இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.
கருஞ்சீரக நீரை எப்படி தயாரிப்பது?
இரவு தூங்கும் முன், ஒரு டம்ளர் நீரில் 8-10 கருஞ்சீரக விதைகளை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிறுநீரைப் பெருக்கி உடல் எடையைக் குறைத்து ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!