இரத்த தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்வென்ன தெரியுமா ?

- Advertisement -

நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் தானங்களிலே சிறந்த தானங்கள் ஆக அன்னதானம், கண் தானம், ரத்த தானம் பெரும்பாலும் இதைத்தான் சொல்வார்கள். ஆனால் இதிலும் தானத்திலே சிறந்த தானம் ரத்த தானம் என்று வாசகங்களை நீங்கள் ஆங்காங்கே எழுதப்பட்டு இருப்பதையோ அடுத்தவர்கள் சொல்வதையோ நீங்கள் நிச்சயமாக கேட்டிருப்பீர்கள் அல்லது பார்த்திருப்பீர்கள். நாம் ஒருவருக்கு ரத்த தானம் செய்வதன் மூலம் உங்கள் இரத்தை பயன்படுத்தி கொள்ளும் நபர் மட்டும் பயனடைவது இல்லை. அந்த ரத்தம் கொடுப்பதனால் நமக்கும் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் பல பயன்கள் உள்ளன. நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த உடல் நலம் தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இதயநோய் அபாயத்தை குறைக்கலாம் :-

- Advertisement -

இரத்த தானம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம் என்பார்கள். அதுபோல் இரத்த தானம் செய்பவரின் உடல் எடை 40 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும். இப்படி குறித்த நேரத்தில் சரியான முறையில் இரத்த தானம் செய்து வந்தால் நம் உடலில் உள்ள இரும்பு சத்தின் அளவை நம்மளால் கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் நம் உடலில் இதயத்திற்கு அபாயம் ஏற்படுவது குறைக்கிறது. அதிக அளவில் இரும்பு சேர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா உடலில் அதிக அளவில் இரும்பு சேர்த்தால் அது ஆக்சிஜனேற்றம் சேதம் ஏற்படுத்தும், முதுமை அடைவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை ஏற்படுவதை அதிகப்படுத்தும்.

புதிய இரத்த அனுக்கள் உற்பத்தியாகும் :-

ரத்த தானம் செய்வதினால் நம் உடலில் ஏற்படும் மற்றொரு நன்மை என்னவென்றால் ரத்த தானம் செய்வதால் நம் உடலில் உள்ள ரத்த அணுக்களை உற்பத்திகளை தூண்டி புதிய ரத்த அணுக்களின் அதிகரிப்பதை தூண்ட முடியுமாம் மற்றும் நீங்கள் இரத்த தானம் செய்த பிறகு உங்கள் உடல்லில் உள்ள எலும்பு பகுதியில் இருக்கும் மஞ்சையின் உதவியுடன் ரத்ததானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புதிய ரத்த அணுக்களை அதிகரிக்கும் வேலையே செய்ய ஆரம்பித்து விடும். நீங்கள் இழந்த அனைத்து ரத்த அணுக்களும் 30 நாட்கள் முதல் 60நாட்களில் உற்பத்தியாகும். இதனால்தான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம் என்று சொல்வார்கள் குறித்த நேரத்தில் இரத்த தானம் செய்வதால் புதிய ரத்த அணுக்கள் உருவாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

-விளம்பரம்-

ஹீமோக்ரோமாடோசிஸை நோயை தடுக்க முடியும் :-

ஹீமோக்ரோமாடோசிஸை இருப்பவர்களுக்கு இரத்த தானம் செய்வது மூலமாக இந்த பிரச்சனையே குணப்படுத்த முடியும் அதன் வளர்ச்சி ஆபத்தை குறைப்பதற்காகவும் பயன்படும் ஆகையால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்யுங்கள். ஹீமோக்ரோமாடோசிஸை என்பது நம் உடலில் இருக்கும் இரும்புச்சத்து அதிகமாக உறிஞ்சப்படும் இதனால் உடலில் பல்வேறு பிரச்சனையை உருவாக்கும். சரியான கால இடைவெளியில் வழக்கமாக ரத்ததானம் செய்தால் இரும்பு சத்து சுமையை குறைக்கலாம்.

உடல் எடை குறையும் :-

-விளம்பரம்-

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்து வந்தால் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்குமாம் மற்றும் பெரியவர்கள் இரத்த தானம் செயவது உடல் நலம் பாதுகாப்பாக இருப்பதற்கு இது ஒரு வழியாக இருக்கும். நீங்கள் 450 மில்லி இரத்த தானம் செய்தால் உங்கள் உடலில் இருக்கும் 650 கலோரிகளை குறைக்குமாம். ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரத்த தானம் செய்வது மிகவும் ஆபத்தான ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here