Advertisement
சட்னி

அடுத்தமுறை இப்படி மட்டும் சட்னி அரைச்சு சாப்பிட்டு பாருங்க! இதன் சுவைக்கு ஈடு இனையே இல்லை!

Advertisement

இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கத்திரிக்காய் சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு

இதையும் படியுங்கள் : ஆந்திரா குண்டூர் கார சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சும்மா ஒரே மாதிரியே சட்னி வைக்காதீர்கள்!

Advertisement

சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த கத்திரிக்காய் சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கத்திரிக்காய் சட்னி | Brinjal Chutney Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கத்திரிக்காய் சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இந்த கத்திரிக்காய் சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword brinjal chutney, கத்திரிக்காய் சட்னி
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • மிக்ஸி

Ingredients

தேவையான பொருட்கள்:

  • டீஸ்பூன் எண்ணெய்
  • கட்டி பெருங்காயம் சிறிய துண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 5to6 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 150 கிராம் கத்திரிக்காய்
  • புளி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 3 பச்சை மிளகாய்
  • 4 வர மிளகாய்
  • 1 தக்காளி நறுக்கியது
  • கருவேப்பிலை
  • ½ கப் தேங்காய் துருவல்

தாளிக்க:

  • எண்ணெய் தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • 1 வர மிளகாய்
  • கருவேப்பிலை கொஞ்சம்

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து உளுத்தம் பருப்பை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ஆற வைக்கவேண்டும்.
  • பிறகு அதே எண்ணெயில் பூண்டு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும்.
  • வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அதே எண்ணெயில் பாதி அளவு கத்திரிக்காய் வேகவேண்டும்.
  • பாதி வெந்ததும் பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வெந்தவுடன் அதன் மேல் கருவேப்பிலை சேர்த்து அதனை தனியாக எடுத்து ஆற வைக்கவேண்டும்.
  • ஆறியதும் ஒரு மிக்சியில் முதலில் வறுத்து வைத்த உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • அடுத்து தாளிக்க கொடுக்க பட்டுள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து சட்டினில் கொட்டி பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

3 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

11 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

12 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

12 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

14 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

17 மணி நேரங்கள் ago