- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 11 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கத்திரிக்காய் சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு
இதையும் படியுங்கள் : ஆந்திரா குண்டூர் கார சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சும்மா ஒரே மாதிரியே சட்னி வைக்காதீர்கள்!
சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த கத்திரிக்காய் சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து உளுத்தம் பருப்பை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ஆற வைக்கவேண்டும்.
பிறகு அதே எண்ணெயில் பூண்டு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அதே எண்ணெயில் பாதி அளவு கத்திரிக்காய் வேகவேண்டும்.
பாதி வெந்ததும் பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வெந்தவுடன் அதன் மேல் கருவேப்பிலை சேர்த்து அதனை தனியாக எடுத்து ஆற வைக்கவேண்டும்.
ஆறியதும் ஒரு மிக்சியில் முதலில் வறுத்து வைத்த உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அடுத்து தாளிக்க கொடுக்க பட்டுள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து சட்டினில் கொட்டி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.






