Advertisement
சட்னி

சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி செய்யலாம் வாங்க!

Advertisement

நம்ம இட்லி தோசைக்கு நிறைய சட்னி வகைகள் சாப்பிடிருப்போம். ஆனா நம்ம வீட்ல கொத்தமல்லி புதினா எவ்வளவு இருந்தாலும் என்னதான் நம்ம பிரிட்ஜ் குள்ள வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ள அது அழுகி போய்விடும். அப்படி அழுகி போயி வேஸ்ட் ஆகுறதுக்கு முன்னாடியே கொத்தமல்லி வச்சு சூப்பரான ஒரு கொத்தமல்லி சட்னி செய்யலாம் ‌ இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி தக்காளி சட்னி பூண்டு சட்னி, கார சட்னி அப்படின்னு பல வகையான சட்னி சாப்பிட்டு இருந்தாலும் இப்ப நம்ம செய்யப் போற இந்த கொத்தமல்லி சட்னி ரொம்ப டேஸ்ட்டாவும் உடம்புக்கு குளிர்ச்சியாகவும் உடம்புல இருக்க ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

கொத்தமல்லி கருவேப்பிலை புதினா அப்படின்னு நம்ம சமையல்ல இதுல எது போட்டாலும் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் இது எல்லாத்தையும் ஓரமா எடுத்து வச்சுருவாங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்காகவே நம்ம இந்த கொத்தமல்லிய அரைச்சு சட்னி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா கொத்தமல்லியோட முழு சத்துக்களும் எல்லாருக்கும் கிடைக்கும்.

Advertisement

அதுமட்டுமில்லாம இந்த கொத்தமல்லி சட்னி சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி ஏன் வெறும் சாதத்தில் கூட இந்த கொத்தமல்லி சட்னியை போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இந்த கொத்தமல்லி சட்னி செய்ய நமக்கு ரொம்ப நேரம் எல்லாம் தேவைப்படாது ரொம்பவே சீக்கிரமா இந்த சட்னியை நம்ம செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

கொத்தமல்லி சட்னி | Coriander Chutney recipe In Tamil

Advertisement
Print Recipe
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா அப்படின்னு நம்ம சமையல்ல இதுல எது போட்டாலும் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் இது எல்லாத்தையும் ஓரமா எடுத்து வச்சுருவாங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்காகவே நம்ம இந்த கொத்தமல்லிய அரைச்சு சட்னி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா கொத்தமல்லியோட முழு சத்துக்களும் எல்லாருக்கும் கிடைக்கும். இந்த கொத்தமல்லி சட்னி
Advertisement
செய்ய நமக்கு ரொம்ப நேரம் எல்லாம் தேவைப்படாது ரொம்பவே சீக்கிரமா இந்த சட்னியை நம்ம செஞ்சு முடிச்சிடலாம்
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Coriander chutney
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 206

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கட்டு கொத்தமல்லி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 பல் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • கொத்தமல்லி இலைகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு கொத்தமல்லி இலைகளை சேர்த்து  நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து வதக்கிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அனைத்தையும் ஆற வைக்கவும்.
  • அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg

இதையும் படியுங்கள் :வெறும் ரெண்டே பொருள் இருந்தால் வீட்டிலேயே ஈஸியா கடலை மிட்டாய் செஞ்சிடலாம்!

Advertisement
Ramya

Recent Posts

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

14 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

3 மணி நேரங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

12 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

16 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

16 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

16 மணி நேரங்கள் ago