Advertisement
அசைவம்

ஹோட்டல் ஸ்டைலில் பட்டர் சிக்கன் சாப்பிடனுமா இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, ருசி அபாரமா இருக்கும்!!!!

Advertisement

பட்டர் சிக்கன், தந்தூரி , நாண் போன்ற உணவு வகைகளை நாம் வீட்டில் எப்படித் தான் சமைத்தாலும் ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வருவதில்லை. இதற்கு காரணம் அதில் சேர்க்கும்  சில பொருட்களும் செய்முறையும் தான். மற்ற சிக்கன் உணவு போல் காரம் அதிகம் இல்லாமல், குழதைகள் சாப்பிட எதுவாக இருக்கும்..

 குழந்தைகள் விரும்பி சாப்பிட இந்த பட்டர் சிக்கன் இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.  பட்டர் சிக்கன் வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை.  இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் பட்டர் சிக்கன் போல எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

Advertisement

பட்டர் சிக்கன் | Butter Chicken Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள்விரும்பி சாப்பிட இந்த பட்டர் சிக்கன் இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.  பட்டர் சிக்கன் வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா,சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும்…இந்த சமையல் குறிப்பு பதிவில் ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் பட்டர் சிக்கன் போல எப்படிசெய்வது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.
Advertisement
Course Gravy
Cuisine north india
Keyword butter chicken
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 230

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 50 கிராம் பட்டர்
  • 2 தேக்காண்டி சில்லி பவுடர்
  • 1 மேசைக்கரண்டி புளிப்பில்லாத கட்டி தயிர்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • உப்பு தேவைக்கு
  • மல்லி இலை அலங்கரிக்க

அரைக்க:

  • 2 வெங்காயம் பெரியது
  • 2 தக்காளி பெரியது
  • 10 முந்திரிப்பருப்பு

Instructions

  • பட்டர்
    Advertisement
    சிக்கன் செய்ய தேவையான பொருள்களை தயாராக வைத்து கொள்ளவும். பின்பு சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது. தயிர், உப்பு, ஒரு தேக்கரண்டி சில்லிபவுடர் போட்டு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயம்,முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆற வைக்கவும். தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும். மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • பின்பு கடாயில் பட்டர் போட்டு அதிகம் உருகும் முன்பு பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனைபோட்டு சிவக்க பிரட்டி வேக விடவும். பின்பு அரைத்த தக்காளி, முந்திரி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
  • பின் ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சிறிது சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்கு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பட்டர் சிக்கன் தயார்!
  • இது சப்பாத்தி, நாண், பூரி, ப்ரைடு ரைஸ் வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்..கடையில் நாம் வாங்கும் பட்ட சிக்கன் டேஸ்ட் கண்டிப்பாக வரும்.

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

52 நிமிடங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

1 மணி நேரம் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

6 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

6 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

7 மணி நேரங்கள் ago