வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் கேரமல் புட்டிங் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

பொதுவா நிறைய குழந்தைகளுக்கு இனிப்புல செஞ்ச கேக் பலகாரங்கள் சாக்லேட் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் லதா நம்ம கடைகள்ல போய் இந்த மாதிரியான இனிப்பு பலகாரங்களை வாங்கி சாப்பிடுவோம். ஆனா இப்ப எல்லாம் வீட்டிலேயே நமக்கு என்னென்ன மாதிரியான கேக் வேணுமோ அதெல்லாம் ஈஸியா செஞ்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

அந்த மாதிரி நம்ம கேக் செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படும் அப்படின்னு நினைப்போம் ஆனா கண்டிப்பா இல்ல சிம்பிளான கேட்க பிரட்ட வச்சே பண்ணக்கூடிய நிறைய கேட்க இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம பிரட் வச்சு பண்ணக்கூடிய ஒரு சிம்பிளான கேரமல் புட்டிங் தான் எப்படி பண்றதுன்னு பாக்க போறோம். ஸ்கூல் காலேஜ் போயிட்டு வர்ற உங்க குழந்தைகளுக்கு இந்த கேரமல் புட்டிங் ஈவ்னிங்ல செஞ்சு வச்சீங்கன்னா ரொம்பவே விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

பிரட் வச்சு நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் பிரட் சாண்ட்விச் பிரட் டோஸ்ட் பிரட் அல்வா அப்படின்னு வச்சு செய்யக்கூடிய எல்லாமே செம டேஸ்ட்ல சூப்பராக இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய கேரமல் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4.50 from 2 votes

கேரமல் புட்டிங் | Caramel Pudding Recipe In Tami

பொதுவா நிறையகுழந்தைகளுக்கு இனிப்புல செஞ்ச கேக் பலகாரங்கள் சாக்லேட் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.ஃபர்ஸ்ட் லதா நம்ம கடைகள்ல போய் இந்த மாதிரியான இனிப்பு பலகாரங்களை வாங்கி சாப்பிடுவோம். பிரட் வச்சு நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் பிரட் சாண்ட்விச் பிரட் டோஸ்ட் பிரட் அல்வா அப்படின்னுவச்சு செய்யக்கூடிய எல்லாமே செம டேஸ்ட்ல சூப்பராக இருக்கும். அந்த வகையில இப்ப நம்மரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய கேரமல் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Caramel Pudding
Yield: 2
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 பிரட்
  • 1 கப் சர்க்கரை
  • 2 கப் பால்
  • 1 முட்டை
  • 1 டீஸ்பூன் வெண்ணிலாஎசன்ஸ்

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரின் முட்டையை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் பிரட் துண்டுகள் வெண்ணிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன் சர்க்கரை பால் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும் இப்பொழுது ஒரு கடாயில் மீதியுள்ள சர்க்கரையை சேர்த்து பொன்னிறமாகும் வரை அதனை காய்ச்ச வேண்டும்
  • ஒரு பாத்திரத்தில் இந்த சர்க்கரை கரைசலை சேர்த்து அதற்கு மேல் மிக்ஸியில் அடித்து வைத்துள்ள கலவையை ஊற்றிக் கொள்ளவும்
  • அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதற்குள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் கலவையை சேர்த்துள்ள பாத்திரத்தைவைத்து அரை மணி நேரம் நன்றாக வேக வைத்து எடுத்தால் சூப்பரான கேரமல் புட்டிங் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Sodium: 21mg | Potassium: 382mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் நண்டு ரோஸ்ட் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!