வீட்டிலயே சூப்பரான மில்க் ஷேக் செய்யலாம் ஒரு தரம் முந்திரி கேரட் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் மற்றும் பாதாம் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வழக்கமாக கேரட் வைத்து பொரியல், சாம்பார், சூப் போன்றவற்றில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு இருப்போம். கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் இந்த மாதிரி செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

-விளம்பரம்-

மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.‌ உடல் சூட்டை தணிக்க நமக்கு கம்பங்கூழும், கேப்பைக்கூழும், பழைய சோறும் என்பது போன்று குழந்தைக்கு குளிர்ச்சியளிக்க மில்க் ஷேக் போதும். அதனால் கேரட்டை கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான இந்த பாதாம் கேரட் மில்க் ஷேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

முந்திரி கேரட் மில்க் ஷேக் | Cashew Carrot Milkshake Recipe In Tamil

மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் மற்றும் பாதாம் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வழக்கமாக கேரட் வைத்து பொரியல், சாம்பார், சூப் போன்றவற்றில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு இருப்போம். கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் இந்த மாதிரி செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Drinks
Cuisine: Indian
Keyword: Cashew Carrot Milkshake
Yield: 3 People
Calories: 25kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கண்ணாடி டம்ளர்

தேவையான பொருட்கள்

  • 4 கேரட்
  • 1/2 கப் முந்திரி
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 கப் வெல்லம்
  • ஐஸ் கட்டிகள் தேவையான அளவு
  • 6 பாதாம்

செய்முறை

  • முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
  • பின் மிக்ஸியில் நறுக்கிய கேரட், வெல்லம் , பாதாம், முந்திரி, காய்ச்சி ஆற வைத்த பால், சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின் மேலும் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் துருவிய கேரட் சேர்த்து கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான கேரட் மில்க் ஷேக் தயார். நீங்கள் விரும்பினால் ஐஸ்கிரீம் சேர்த்தும் பருகலாம் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 5.5g | Fat: 2.4g | Sodium: 69mg | Potassium: 328mg | Fiber: 2.5g | Sugar: 4.7g | Vitamin A: 83IU | Vitamin C: 6.22mg | Calcium: 33mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!