காரசாரமான ருசியில் காலிஃப்ளவர் பக்கோடா இப்படி செய்து பாருங்கள்! டீ & காபிக்கு பக்காவான ஸ்நாக்!

- Advertisement -

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காலிஃப்ளவர் பக்கோடா. காலிஃப்ளவர் பகோடா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஸ்நாக்ஸ். பேக்கரி , ரெஸ்ட்ரண்டுகள் சென்றாலும் இதைத்தான் விரும்பி கேட்பார்கள். காலிஃப்ளவரை விரும்புவோருக்குக் கூட அதை இப்படி வறுத்து சாப்பித்தான் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் நினைத்த போதெல்லாம் காலிஃப்ளவர் பக்கோடா செய்து சாப்பிட‌ விரும்புபவர்களுக்கு தான் இந்த ரெசிபி. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. காலிஃபிளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிஃபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.

-விளம்பரம்-

இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்துக்குச் செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. மாலை வேளையில் மொறுமொறுப்பாக டீ, காபியுடன் ஏதேனும் சாப்பிட நினைக்கும் போது, வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மாலை நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தால் யோசிக்காமல் இந்த எளிதாக செய்யக்கூடிய காலிஃப்ளவர் பக்கோடாவை செய்து உங்கள் காபியுடன் சுவையுங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

காலிஃப்ளவர் பக்கோடா | Cauliflower Pakoda Recipe In Tamil

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காலிஃப்ளவர் பக்கோடா. காலிஃப்ளவர் பகோடா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஸ்நாக்ஸ். பேக்கரி , ரெஸ்ட்ரண்டுகள் சென்றாலும் இதைத்தான் விரும்பி கேட்பார்கள். காலிஃப்ளவரை விரும்புவோருக்குக் கூட அதை இப்படி வறுத்து சாப்பித்தான் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் நினைத்த போதெல்லாம் காலிஃப்ளவர் பக்கோடா செய்து சாப்பிட‌ விரும்புபவர்களுக்கு தான் இந்த ரெசிபி.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Cauliflower Pakoda
Yield: 4 People
Calories: 25kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 காலிஃபிளவர்
  • 1/4 கப் கடலை மாவு
  • 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 4 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் ரெட் ஃபுட் கலர்
  • 1 டீஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக வெட்டி அதை தண்ணீரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • இவை ஆறியதும் இதனை தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் பிளவர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, புட் கலர் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பில்லை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பக்கோடா தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். பின் காலிஃபிளவரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சூடான சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 25kcal | Carbohydrates: 5.3g | Protein: 6g | Fat: 5g | Sodium: 16mg | Potassium: 303mg | Fiber: 5.5g | Vitamin C: 46.4mg | Calcium: 22mg

இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா காலிஃப்ளவர் சாதம் இப்படி ஒரு தரம் செய்து கொடுத்தால் அடிக்கடி உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்!