பொதுவாக நம் வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். . ஆகையால் இன்று ஒரு டிபன் உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆம் இன்று கோதுமை சப்பாத்தி ரோலை புதுவிதமான முறையில செய்யப் போகிறோம். நீங்கள் இதை போல் ரோல் சப்பாத்தி செய்தால்
இதையும் படியுங்கள் : சுவையான ஸ்டவ்வுடு முட்டை மசாலா சப்பாத்தி செய்வது எப்படி ?
அப்படியே குருமா இல்லாமல் சப்பாத்தியை சாப்பிடலாம் அந்த அளவிற்கு அதன் ருசி இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு சப்பாத்தி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு சப்பாத்தி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் கூட இது பிடித்தமான உணவாக இருக்கும். அதனால் இன்று இந்த கோதுமை சப்பாத்தி ரோல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கோதுமை சப்பாத்தி ரோல் | Kothumai Chappathi Role Recipe in Tamil
Equipment
- 2 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- எண்ணெய் தேவையான அளவு
- 3 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 10 பல் பூண்டு
- 1 tsp மிளகாய் துாள்
- உப்பு தேவையான அளவு
- 1 tsp சூடான எண்ணெய்
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டினை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கப் அளவு கோதுமை மாவு எடுத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனுடன் சூடான நீர் ஊற்றி சாப்ட்டாக பிசைந்து 10 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கியதும் இதனுடன் சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் இதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.
- அதன் பின் எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் கடாயை இறக்கி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். பின் மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக பிடித்து தேய்த்து மென்மையாக தேய்க்கவும்
- பின் நாம் தயார் செய்த மசாலா கலவையை ஒவ்வொரு மாவிலும் வைத்து ரோல் செய்து கொள்ளவும். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து
- அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான கோதுமை சப்பாத்தி ரோல் தயார்.