காலை டிபனுக்கு ஜம்முனு கேரளா ஸ்பெஷல் செம்பா புட்டு இப்படி செய்து கொடுங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். இன்று நாம் செம்பா (சிகப்பு அரிசி) புட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூழ் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். அந்த வகையில் இன்று நாம் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் செம்பா புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக புட்டு உள்ளது. கேரளா ஸ்டைல் செம்பா புட்டு ரெசிபி என்பது சிகப்பு அரிசி மாவு மற்றும் தேங்காய் மற்றும் புட்டு ஸ்டீமரில் சமைக்கப்படும் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். சுவை முற்றிலும் சத்தானது மற்றும் முட்டை கறி அல்லது கடலை கறியுடன் நன்றாக இருக்கும். காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் புட்டுவை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

- Advertisement -
Print
5 from 1 vote

கேரளா ஸ்பெஷல் செம்பா புட்டு | Chemba Puttu Recipe In Tamil

பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். இன்று நாம் செம்பா (சிகப்பு அரிசி) புட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூழ் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். அந்த வகையில் இன்று நாம் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் செம்பா புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Chemba Puttu
Yield: 3 People
Calories: 140kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 புட்டு பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சிவப்பு அரிசி
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • தண்ணீர் தேவையான அளவு
  • நாட்டு சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அரிசியை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி காய் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மாவு போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவை தேவையான அளவு ஒரு பவுளில் எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு கலந்து புட்டு பதத்திற்க்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு புட்டு அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நிரப்பி நன்றாக கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்த உடன் புட்டுக் குழாயில் புட்டு மாவை வைத்து பிறகு தேங்காய் உள்ளே போட்டு மீண்டும் புட்டு மாவை உள்ளே வைக்கவும். மேல் துருவிய தேங்காய் போடவும்.
  • பின் புட்டுக் குழாயில் ஆவி வந்ததும் புட்டுக் குழாய் பின் வழியில் இருந்து குத்தி மெதுவாக புட்டை வெளிய எடுக்கவும்.‌ அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் செம்பா புட்டு தயார். இதனை நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 140kcal | Carbohydrates: 3.1g | Protein: 9g | Fat: 2g | Sodium: 4.8mg | Potassium: 115mg | Fiber: 2g | Vitamin C: 6.7mg | Calcium: 28mg | Iron: 4mg

இதனையும் படியுங்கள் : பாரம்பரிய சுவையில் சுறா புட்டு சுலபமாக செய்றது எப்படின்னு தெரிஞ்சிக்கலாமா?