Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் சிக்கன் லாலிபாப் இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

Advertisement

சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் இதை சிக்கன் லாலிபாப் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த சுவையான சிக்கன் லாலிபாப் ஹோட்டல்ல சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி சுவையா இப்போ வீட்ல எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.

சுவையான சிக்கன் லாலிபாப் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ஸ்டார்ட்டர்தான் சாப்பிடும்போது நார்மலா சாப்பிட்டு இருப்போம். அதே வீட்ல சாப்பிட்டா இந்த சிக்கன் லாலிபாப் தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் சேர்த்து வச்சு சாப்பிடும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும். லெக் பீஸ் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கும் அது சிக்கன் கால் மாதிரி சேர்த்துக் கொள்வது எல்லாருக்கும் பிடிக்கும். சிக்கன்ல என்ன மாதிரி உணவுகள் செய்தாலும் நம்ம எல்லாருக்குமே பொரிக்கிறது அப்படிங்கிற ஒரு விஷயம் ரொம்பவே பிடிக்கும்.

Advertisement

அதனால தான் நம்ம அதிகமா சிக்கன் பிரை பண்ணி சாப்பிடறதும் 65 , வறுவல் மட்டுமில்லாமல் தந்தூரி இது மாதிரி உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் லாலிபாப்பும் எல்லாருக்கும் பிடிக்கிற ஒரு உணவுதான். இந்த சிக்கன் லாலிபாப் ஹோட்டல் ஸ்டைல்ல வீட்ல எப்படி ரொம்ப சூப்பரா சுலபமா செய்யறது அப்படிங்கிறது தான் இந்த பதிவுல பாத்துட்டு இருக்கோம். இந்த சுவையான சிக்கன் லாலிபாப் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

சிக்கன் லாலிபாப் | Chicken Lollypop Recipe In Tamil

Print Recipe
சுவையான சிக்கன் லாலிபாப் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ஸ்டார்ட்டர்தான் சாப்பிடும்போது நார்மலாசாப்பிட்டு இருப்போம். அதே வீட்ல சாப்பிட்டா இந்த சிக்கன் லாலிபாப் தயிர் சாதம், ரசம்சாதம், சாம்பார் சாதம் சேர்த்து வச்சு
Advertisement
சாப்பிடும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும். லெக்பீஸ் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கும் அது சிக்கன் கால் மாதிரி சேர்த்துக் கொள்வதுஎல்லாருக்கும் பிடிக்கும். சிக்கன்ல என்ன மாதிரி உணவுகள் செய்தாலும் நம்ம எல்லாருக்குமேபொரிக்கிறது அப்படிங்கிற ஒரு விஷயம் ரொம்பவே பிடிக்கும்.
Course starters
Cuisine tamil nadu
Keyword Chicken lollipop
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 2
Calories 91

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 4 சிக்கன் கால் அல்லது எலும்போடு சேர்ந்த சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு

லாலிபாப்மேல் பூசுவதற்கு

  • 1 டீஸ்பூன்  சோள மாவு
  • 1 டீஸ்பூன்  மைதா மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை மிளகு தூள்
  • 2 கப் பிரட் தூள்

பொரிப்பதற்கு

  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் முதலில்  இஞ்சி பூண்டுவிழுது,  மிளகாய்தூள், மிளகுத்தூள் , சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து சிக்கனில்தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு, மிளகுதூள், உப்பு , தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் ஊற வைத்துள்ள சிக்கன் லாலிபாப் மேல் ஸ்பூனால் எடுத்து அனைத்து பக்கமும் படும் படி ஊற்ற வேண்டும்.
  • ஒரு ப்ளேட்டில் பிரட் தூளை கொட்டி அதில்  சிக்கன் லாலிபாப்புகளை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள லாலிபாப்புகளை பொரித்து. எடுக்கவும்.
  • ஒரு பிளேட்டில் சிக்கன் லாலிபாப்புகளை  சூடாக எடுத்து வைத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். இதோ சூடான சுவையான  சிக்கன் லாலிபாப் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g

இதையும் படியுங்கள் : ருசியான சிக்கன் பீட்சா எளிமையாக நாம் வீட்டிலயே செய்விடலாம்! அவசியம் மிஸ் பண்ணாம இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago