Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

அசத்தலான சுவையில் சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் அனைத்து வகையான விருந்துக்கும் ஒரு அருமையான ஸ்டார்டர். சிக்கன் மற்றும் பன்னீர் ஒன்றாக சேர்த்து மென்மையான, சுவையான கட்லெட்டை தயாரிக்கலாம். மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் ராஜ்மா கட்லெட் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Advertisement

இந்த சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்டில் நூடூல்ஸில் பனீர், சிக்கன் போன்றவைகள் சிறிது சிறிதாக நறுக்கி போடப்பட்டிருப்பதால் அதன் சுவை அதிகமாகவே இருக்கும். அதனால் இன்று இந்த சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சிக்கன் பன்னீர் கட்லெட் | Chicken Paneer Cutlet Recipe in Tamil

Print Recipe
அசத்தலான சுவையில் சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் அனைத்து வகையான விருந்துக்கும் ஒரு அருமையான ஸ்டார்டர். சிக்கன் மற்றும் பன்னீர் ஒன்றாக சேர்த்து மென்மையான, சுவையான கட்லெட்டை தயாரிக்கலாம். மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும். இந்த சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்டில் நூடூல்ஸில் பனீர், சிக்கன் போன்றவைகள் சிறிது சிறிதாக நறுக்கி போடப்பட்டிருப்பதால் அதன் சுவை அதிகமாகவே இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Cutlet, கட்லெட்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 80

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 250 கிராம் சிக்கன் எலும்பில்லாதது
  • 200 கிராம் பன்னீர்
  • 4 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 4 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 50 கிராம் கொத்தமல்லி
  • 50 கிராம் சோள மாவு
  • 2 Tsp கரம் மசாலா
  • 2 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 Tsp மிளகாய் பொடி
  • 1/4 Tsp மஞ்சள் தூள்
  • 1 Tsp கொத்தமல்லி பொடி
  • எள் விதை தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  •  உப்பு தேவையான அளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் பனீர் எடுத்து அதனை மஞ்சள் தூள், மிகளாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.
    Advertisement
  • ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து, வெங்காயம், பொடியாக நறுக்கிய மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிது மிளகாய் தூள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும்.
  • பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் பேஸ்டை எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், சோள மாவு, எள்மற்றும் சிறிது உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்று சேரும்படி நன்றாகக் கலந்து விட வேண்டும்.
  • பிறகு மசாலா கலந்து வைத்த பனீர் துண்டுகளை எடுத்து சிக்கன் பேஸ்டில் நன்கு கலந்து அதனை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
  • பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மேல்புறம் வெந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
  • எண்ணெயில் பொரிப்பது பிடிக்கவில்லை என்றால், தவாவில் போட்டும் இரண்டு புறமும் வேகும்படி நன்கு சுட்டு எடுக்கவும். இப்போது சுவையான சிக்கன் பனீர் கிலாபி கட்லெட் தயார்.

Nutrition

Serving: 600G | Calories: 80kcal | Carbohydrates: 38g | Protein: 13g | Fat: 1.6g | Saturated Fat: 0.1g | Cholesterol: 1.1mg | Sodium: 2.1mg | Potassium: 281mg | Fiber: 1g | Sugar: 0.5g | Iron: 0.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

11 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

12 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

12 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

13 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

13 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

16 மணி நேரங்கள் ago