Advertisement
ஐஸ்

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

Advertisement

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கூலாக்கிவிடும்; புது உற்சாகம் பிறக்கும். இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் வாழைப்பழ ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம்.

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது.கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

Advertisement

இன்றைய பதிவில் வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் சுவையான வாழைப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் வெளியில் வாங்கி சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையில் இருக்காது என்பதால். நல்லது தான், ஆனால் இனி ஐஸ்கிரீமை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம் | Chocolate Banana Icecream Recipe In Tamil

Print Recipe
வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கூலாக்கிவிடும்; புது உற்சாகம் பிறக்கும். இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் வாழைப்பழ ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். கோடை காலம் வந்தாலே
Advertisement
முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம்.
Course deserts
Cuisine Indian
Keyword Chocolate Banana Icecream
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Advertisement
Servings 4 People
Calories 105

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 2 வாழைப்பழம்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  • 4 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்

Instructions

  • முதலில் வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை பிரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழ துண்டுகள், பொடித்த சர்க்கரை, பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் ஃப்ரெஷ் கிரீம், வெண்ணிலா எசன்ஸ், கோகோ பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  • பின் இந்த ஐஸ்கிரீம் கலவையை ஒரு பவுளுக்கு மாற்றி பிரிட்ஜில் இரவு முழுவதும் வைக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம் தயார். தயாரான ஐஸ்கிரீமை எடுத்து அதன் மேல் நறுக்கிய நட்ஸ் அல்லது டூட்டி ப்ரூட்டி தூவி பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 3.1g | Fat: 4g | Sodium: 26mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Sugar: 2.9g | Vitamin A: 5IU | Vitamin C: 87mg | Calcium: 22mg | Iron: 7.2mg

இதனையும் படியுங்கள் : அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமா சேமியா பால் ஐஸ் இப்படி செய்து பாருங்க குளு குளுனு இருக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

20 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago