அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமா சேமியா பால் ஐஸ் இப்படி செய்து பாருங்க குளு குளுனு இருக்கும்!

semiya ice
- Advertisement -

சுட்டெரிக்குற வெயிலுக்கு இதமாக குளுகுளுனு என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. வீட்டிலே சேமியா ஐஸ் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். 90s கிட்ஸ்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ் என்றால் அது வீதிகளில் விற்று வரும் சேமியா ஐஸ் தான். அவ்வளவு சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அடிக்கிற வெயிலுக்கு இதமா வெண்ணிலா ஐஸ்கிரீம், இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

அந்த வகையில் இனி வீட்டிலேயே சுலபமாக சேமியா ஐஸ் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.அதுவும் வெயிலுக்கு சாப்பிட்டால் உடம்பே சும்மா சில்லுனு ஆய்டும்.

semiya ice
Print
No ratings yet

சேமியா பால் ஐஸ் | Semiya Milk Ice Recipe In Tamil

சுட்டெரிக்குற வெயிலுக்கு இதமாக குளுகுளுனு என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. வீட்டிலே சேமியா ஐஸ் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். 90s கிட்ஸ்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ் என்றால் அது வீதிகளில் விற்று வரும் சேமியா ஐஸ் தான். அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் இனி வீட்டிலேயே சுலபமாக சேமியா ஐஸ் செய்து விடலாம்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.அதுவும் வெயிலுக்கு சாப்பிட்டால் உடம்பே சும்மா சில்லுனு ஆய்டும்.
Prep Time10 minutes
8 hours
Total Time8 hours 11 minutes
Course: Dessert, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: semiya milk ice, சேமியா பால் ஐஸ்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பால்
  • கப் சேமியா
  • ¼ கப் சர்க்கரை
  • ¼ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • ¼ டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதில் பால் ஊற்றி வேக விடவும். சேமியா நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்
  • நன்கு கெட்டியாக வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.
  • பிறகு அதனை நன்கு ஆறவிடவும். ஆறியதும் தேவையான வடிவில் அச்சுகளில் ஊற்றி 8 மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும்.
  • பிறகு 8 மணி நேரம் கழித்து அந்த அச்சுக்கலை தண்ணீரில் நினைத்து ஐஸ்ஐ எடுத்து சாப்பிடவும்.