பொதுவாக நான் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக கடைகளில் இருக்கும் அதிகம் கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்த மில்க் ஷேக் மற்றும் இதர குளிர்பானங்களை வாங்கி குடித்து நமது உடலையும் கெடுத்து நம் பணத்தையும் விரையமாக்குவதற்கு பதிலாக அந்த பணத்தில் எந்தவித இரசாயன பொருட்களும் கலக்காமல் வீட்டிலேயே சில பானங்களை தயார் செய்து நாம் குடிக்கலாம். அந்த வகையில் இன்று சாக்லேட் கோல்டு காபி பற்றி தான் பார்க்கப் இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே மிகவும் பிடிக்கும் அதே சாக்லேட் வைத்து இன்று நாம் கோல்ட் காபி தயார் செய்ய போகிறோம். இதுபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கோல்ட் காபி தயார் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி குடிப்பார்கள் உங்களையும் அடிக்கடி இதே போல் செய்து தர சொல்வார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் இருக்கும். ஆகையால் இந்த சாக்லேட் கோல்டு காபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சாக்லெட் கோல்டு காபி | Chocolate Cold Coffee Recipe in Tamil
Equipment
- 1 டீ பாத்திரம்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- ½ கப் சர்க்கரை
- 400 ML பால்
- 3 tpsp காபி தூள்
- 10 ஐஸ் கட்டிகள்
- ¼ கப் சாக்லெட் பவுடர்
- 2 கப் தண்ணீர்
- ½ கப் சாக்லெட் சிரப்
செய்முறை
- முதலில் ஒரு அரை கப் சர்க்கரையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சர்க்கரையை பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு கப் அளவிலான தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள்.
- பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பெரிய பவுலில் சேர்த்து அதனுடன் மூன்று டீஸ்பூன் அளவிலான காபி தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- பின்பு மறுபடியும் டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் 400 ML அளவு பால் ஊற்றி ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு பால் நன்றாக கொதித்து வந்ததும் தீயை குறைத்து வைத்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு நாம் காய்ச்சிய பாலையும் தயார் செய்து வைத்த காப்பியையும் நன்கு குளிர வைத்துக கொள்ளவும். பின்பு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் நான்கு ஐஸ் கட்டிகளை சேர்த்து அதனுடன் மூன்று டீஸ்பூன் அளவு சாக்லேட் சிரப் ஊற்றி அதற்கு மேல் கால் டம்ளர் அளவிற்கு நாம் செய்த நாம் தயார் செய்த காபியை ஊற்றவும்.
- பின் அதில் அரை டம்ளர் காய்சசிய பால் ஊற்றி அதன் மேல் இரண்டு டீஸ்பூன் சாக்லேட் பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் பொடியாக்கிய சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இப்படியே மீதம் இருக்கும் பொருட்களை வைத்து இதே முறையில் சாக்லேட் கோல்டு காபி தயார் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சாக்லேட் கோல்டு காபி இனிதே தயாராகிவிட்டது.