Advertisement
அசைவம்

சுவையான ஸ்டவ்வுடு முட்டை மசாலா சப்பாத்தி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காலை உணவுக்கு ஏற்ற முட்டை சப்பாத்தி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் காலையில் உடனடியாக உணவு செய்யும் அவசர நேரங்களில் இது போன்று முட்டை சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு சைடுடிஷ் எதுவும் தேவைப்படாது. நாம் முட்டைகளை துருவி சப்பாத்தியின் உள் ஸ்டஃப் பண்ணி அதன் பின் சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு வேக வைத்து சாப்பிடும்

இதையும் படியுங்கள் : சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி ?

Advertisement

பொழுது சப்பாத்தியுடன் உள்ளே இருக்கும் முட்டையும் ஃபிளேவர் இணைந்து சாப்பிடும் போது சுவை அற்புதமாக இருக்கும். காலை உணவாக உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதை தயார் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் பெரியவர்கள் கூட இந்த முட்டை சாப்பாத்தி ரெசிபி பிடித்து போகும். அதனால் நம் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஸ்டவ்வுடு முட்டை சப்பாத்தி | Egg Chapathi Recipe in Tamil

Advertisement
408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
காலையில் உடனடியாக உணவு செய்யும் அவசர நேரங்களில் இது போன்று முட்டை சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு சைடுடிஷ் எதுவும் தேவைப்படாது. நாம் முட்டைகளை துருவி சப்பாத்தியின் உள் ஸ்டஃப் பண்ணி அதன் பின் சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு வேக வைத்து சாப்பிடும் பொழுது சப்பாத்தியுடன் உள்ளே இருக்கும் முட்டையும் ஃபிளேவர் இணைந்து சாப்பிடும் போது சுவை அற்புதமாக இருக்கும். காலை உணவாக உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதை தயார் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் பெரியவர்கள் கூட இந்த முட்டை சாப்பாத்தி ரெசிபி பிடித்து போகும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Chapathi, சப்பாத்தி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 89

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்
  • 1 பெரிய தட்டு

Ingredients

முட்டை மசாலா செய்ய

  • 3 அவித்த முட்டை துருவியது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் துள்
  • ¼ tbsp கரம் மசாலா
  • ¼ tbsp மிளகு தூள்
  • ¼ tbsp சீரகத் தூள்
  • உப்பு
  • 1 கைப்பிடி கொத்த மல்லி

சப்பாத்தி மாவு பிசைய

  • 1 ½ கப் கோதுமை மாவு
  • 2 tbsp எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் மூன்று முட்டைகளை அவித்து எடுத்து வைத்துக் கொண்டு பின் ஒரு தட்டில் அந்த மூன்று முட்டைகளையும் துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துருவி
    Advertisement
    அந்த முட்டையுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் நாம் சேர்த்த மசாலா பொருட்களை நன்கு கலந்து விட்டு பின் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுளில் ஒன்றைக் அளவிற்கு கோதுமை மாவு எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவ எண்ணெய் ஊற்றி ஒரு முறை கலந்து கொள்ளவும்.
  • பின் மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு ஐந்து நிமிடம் முடி ஊறவிட்டு பின் எப்போதும் சப்பாத்திக்கு உருண்டை பிடிக்கும் அளவில் உருண்டை பிடித்து பூரிக்கட்டையில் வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.
  • பின் நாம் முதலில் துருவி மசாலா கலந்த முட்டையிலிருந்து இரண்டு டீஸ்பூன் எடுத்து வைத்து சப்பாத்தியை பாதியாக மூடிவிட்டு அதன் ஓரங்களை மடித்து விட்டு முள் கரண்டியால் மீண்டும் சப்பாத்தியின் ஓரங்களை அழுத்தி விடவும்.
  • பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சப்பாத்தி சேர்த்து திருப்பி எடுத்துக் கொள்ளவும் அவ்வளவுதான் நாம் சப்பாத்தியின் உள்ள வைத்திருக்கும் முட்டையும் நன்றாக வெந்துவிடும். எந்த சைட்டிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம்

Nutrition

Serving: 200gram | Calories: 89kcal | Carbohydrates: 45g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 2.1g | Cholesterol: 4mg | Sodium: 5mg | Potassium: 219mg | Fiber: 8g | Sugar: 0.6g
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

4 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

5 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

7 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

10 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

10 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

10 மணி நேரங்கள் ago