Advertisement
அசைவம்

இனி சாம்பார், சட்னி எதுக்கு வீட்டில் 4 முட்டை இருத்தால் போதும் பணியார குருமா இப்படி செய்து பாருங்க!

Advertisement

பொதுவாக குருமா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவற்றுக்கெல்லாம் ஒரு நல்ல சைடிஷ். ஆனால் முட்டை பணியார வைத்து குருமா செய்ய முடியுமா, அப்படி செய்தால் இட்லி, பூரி, சப்பாத்தி போன்றவைகளுக்கு ருசியாக இருக்குமா, அதெல்லாம் சந்தேகமே வேண்டாம். இதன் சுவை மிகவும் நன்றாகவே இருக்கும். சப்பாத்தி போன்றவைகளுக்கெல்லாம் முட்டை பணியாரம் வைத்து செய்யப்படும் குருமா மிகவும் ருசியாகவும் அதே நேரத்தில் இதை செய்ய பத்து நிமிடம் கூட ஆகாது. முட்டை பணியார குருமா சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும்.

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு முட்டை பணியார குருமா எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Advertisement

முட்டை பணியார குருமா | Egg Paniyaara Kuruma Recipe in Tamil

Print Recipe
முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இந்த முட்டையை
Advertisement
வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு முட்டை பணியார குருமா எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Egg Paniyaara Kuruma
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • 2 வெங்காயம்
  • 2 ப.மிளகாய் சிறியது
  • 2 மேஜைக்கரண்டி உகடலை
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்

குருமாவிற்கு

  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 தேங்காய் சிறியது
  • 2 ப.மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 பல் பூண்டு
  • 1 அங்குல துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சோம்பு

Instructions

  • ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். உடைத்த கடலையை பொடித்து கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், பொடித்தஉடைத்த கடலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானது அதில் இந்த கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய், ப.மிளகாய், பூண்டு,இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
  • வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • குருமாவில் பச்சை வாசனை போனவுடன் கடைசியாக முட்டை பணியாரத்தை சேர்த்து, கொத்தமல்லி. கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும்.

Notes

இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.5g | Calcium: 16mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

44 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago