Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் எக் வெஜிடபிள் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசிக்கு எவ்வளவு கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

Advertisement

முன்பெல்லாம் வீட்டில் விருந்தாளி வந்தால் அல்லது விசேஷம் என்றால் சாம்பார், வடை, பாயாசம், கூட்டு, பொரியல், ரசம் என சமையல் இப்படித்தான் போகும். இப்போதெல்லாம் அப்படி வகை வகையான சமையல் கிடையாது. அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் பிரியாணி அசைவம் சாப்பிடாதவர்கள் வெஜிடேபிள் பிரியாணி, புலாவ், இப்படியான உணவுகளை தான் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அதில் இந்த வெஜிடபிள் பிரியாணி ஆகட்டும் இல்லை மற்ற பிரியாணி ஆகட்டும், என்ன தான் நாம் வீட்டில் சமைத்தாலும் கூட ஹோட்டலில் சாப்பிடும் ருசி கிடைப்பதில்லை என்று கடைசியாக ஒரே வார்த்தையில் சொல்லி விடுவார்கள். நாம் கஷ்டப்பட்டு செய்த அனைத்தும் வீணாகி போய்விடும். அந்த ஹோட்டல் ருசியில் வெஜிடபிள் ரைஸ் முட்டை சேர்த்து கூடுதல் சுவையுடன் எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

Advertisement

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றை வைத்துதான் பிரியாணி செய்வதுண்டு. அதிலும் கோழிக்கறி பிரியாணியை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை இரண்டும் இல்லாமல் வெறும் முட்டையை வைத்தும் வெஜிடபிள் ரைஸ் சுவையாக செய்து முடிக்கலாம். இதனை நினைக்கும் நேரத்தில் எல்லாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த மழை காலத்தில் சட்டென செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும். கமகம மணத்துடன் காரசாரமான சுவை நாவில் பட்டவுடனே எச்சில் ஊர ஆரம்பித்து விடும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

எக் வெஜிடபிள் ரைஸ் | Egg Vegetable Rice Recipe In Tamil

Print Recipe
கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றை வைத்துதான் பிரியாணிசெய்வதுண்டு. அதிலும் கோழிக்கறி பிரியாணியை தான்
Advertisement
பலரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள்.ஆனால் இவை இரண்டும் இல்லாமல் வெறும் முட்டையை வைத்தும் வெஜிடபிள் ரைஸ் சுவையாக செய்துமுடிக்கலாம். இதனை நினைக்கும் நேரத்தில் எல்லாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதிலும்இந்த மழை காலத்தில் சட்டென செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமாகஇருக்கும். கமகம மணத்துடன் காரசாரமான சுவை நாவில் பட்டவுடனே எச்சில் ஊர ஆரம்பித்துவிடும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Egg Vegetable Rice
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 61

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கிலோ சீரகசம்பா
  • 150 கிராம் நெய்
  • 4 முட்டை
  • 1/2 கப் விருப்பமான காய்கறிகள்
  • உப்பு தேவைக்கு
  • கிராம்பு தேவையான அளவு
  • பட்டை தேவையான அளவு
  • ஏலக்காய் தேவையான அளவு
  • பிரிஞ்சி தேவையான அளவு
  • 8 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 15 முந்திரி
  • 3 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • அரிசியை கலைந்து அரைமணி நேரம் ஊற விடவும். வாணலியில் நெய் சிறிது நெய்விட்டு காய்கறிகளை உப்பு சேர்த்து அரை பதமாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பின் முட்டையை பொடிமாஸ் போல் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • பெரிய பாத்திரத்தில் நெய் விட்டு வாசனை பொருட்கள்,வெங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் பின்னர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு என ஒன்றன் பின்ஒன்றாக சேர்க்கவும்.
     
  • அரிசியை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின் தேவைக்கு நீர் சேர்த்து கொதிக விடவும்.
  • முக்கால் வாசி நீர் வற்றும் சமயத்தில் ஒன்றன் பின் ஒன்றாக காய்கறிகள் மற்றும் முட்டையை சேர்த்து ஒரு முறை கிளறி பின் 10 நிமிடங்கள் தம்மில் போடவும். பின் எடுத்து பரிமாறவும்.
  • சுவையான எக் மற்றும் வெஜிடபிள் ரைஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 61kcal | Carbohydrates: 7g | Protein: 1.2g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 1.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

8 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

9 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

10 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

11 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

15 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

15 மணி நேரங்கள் ago