Advertisement
அசைவம்

இந்த வார இறுதியை ஸ்பெஷலாக்க ருசியான ஆட்டு கால் பாயா சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement

ஆட்டுக்கால் பாயா அப்படின்னா எல்லாருக்குமே பிடிக்கும். இடியாப்பத்தோடு ஆட்டுக்கால் பாயா சாப்பிடணும் அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சமான ஒரு விஷயமா இருக்கும். ஆட்டுக்கால் பாயா அப்படின்னு சொன்னாலே அது கடைகளில் மட்டும் தான் வாங்கி சாப்பிடுற மாதிரியான ஒரு எண்ணம் எல்லாருக்குமே காரணம் கடைகளில் மட்டும் தான் ஆட்டுக்கால் பாயா ரொம்பவே நல்லா இருக்கும்.

வீடுகள்ல செய்ற ஆட்டுக்கால் பாயா நல்லா இருக்காது அப்படின்னு நினைக்கிறதுதான். ஆனால் ஆட்டுக்கால் பாயாவை ரொம்ப சுலபமாக கடைகளில் விட அதிகமான சுவையில் எப்படி வீடுகளில் செய்யலாம். ரொம்பவே நல்லா இருக்கும் இப்போ நீங்க ஆட்டு கால் வேணும் அப்படி கடைகளில்  முதல் நாளே சொல்லி வச்சிட்டா சுத்தமா தோலெல்லாம் நீக்கி சுட்டு எல்லாமே கிளீன் பண்ணி கொடுத்துடுவாங்க. அப்படியே அவங்க கிளீன் பண்ணி அந்த ஆட்டுக்கால கொடுத்தா கூட நீங்க ஒருவாட்டி சுத்தமாக கழுவிட்டு அதுல ஏதாவது ஆட்டோட முடியெல்லாம் இருக்கா அப்படின்னு பாத்துட்டு நல்லா சுத்தம் பண்ணி அலசி வச்சுட்டு மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து அதுக்கப்புறம் தான் அதை பயன்படுத்த வேண்டும்.

Advertisement

எப்படி பயன்படுத்தும் போது தான் ஆட்டு கால்ல  பாயா செய்து சாப்பிடும்போது ரொம்ப சுவையாக இருக்கும். இப்படி ஆட்டுக்கால் பாயா  ரொம்ப பிடிக்கும் ஆட்டோட காலில் சமையல் பண்றது நிறைய பேருக்கு பிடிக்காது. இருந்தாலும் நீங்க இந்த மாதிரி அந்த ஆட்டு காலில் பாயா செய்து சாப்பிடும்போது அவ்வளவு அருமையா இருக்கும். எப்போதும் சாப்பிடுவதை விட இந்த ஆட்டுக்கால் பாயாவோட இடியாப்பம் சாப்பிடும்போது ருசியா இருக்கும். எப்படி இந்த ஆட்டுக்கால் பாயா வீட்டுல செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

ஆட்டு கால் பாயா | Goat Leg Paaya Recipe In Tamil

Print Recipe
வீடுகள்லசெய்ற ஆட்டுக்கால் பாயா நல்லா இருக்காது அப்படின்னு நினைக்கிறதுதான். ஆனால் ஆட்டுக்கால் பாயாவை ரொம்ப சுலபமாக கடைகளில் விட அதிகமான சுவையில் எப்படி வீடுகளில் செய்யலாம். ரொம்பவே நல்லா இருக்கும் இப்போ நீங்க ஆட்டு கால் வேணும் அப்படி கடைகளில்  முதல் நாளே சொல்லி வச்சிட்டா சுத்தமா தோலெல்லாம் நீக்கி சுட்டு எல்லாமே கிளீன் பண்ணி கொடுத்துடுவாங்க. அப்படியே அவங்க கிளீன் பண்ணி அந்த ஆட்டுக்கால கொடுத்தா கூட நீங்க ஒருவாட்டி சுத்தமாக கழுவிட்டு அதுல ஏதாவது ஆட்டோட முடியெல்லாம் இருக்கா அப்படின்னு பாத்துட்டு நல்லா சுத்தம் பண்ணி
Advertisement
அலசி வச்சுட்டு மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து அதுக்கப்புறம் தான் அதை பயன்படுத்த வேண்டும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Goat Leg Paaya
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 99.93

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

  • 2 ஆட்டின் கால்கள்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 வெங்காயம்
  • 1 பிரியாணி இலை
  • 2 அன்னாசி பூ
  • 2 ஜாதிபத்ரி
  • 4 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 கைப்பிடி புதினா , கொத்தமல்லி
  • 1 கப் காய்ச்சிய பால்
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 10 முந்திரிபருப்பு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    Advertisement
  •  பிறகு குக்கரில் ஆட்டுக்காலை வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கர் மூடி போட்டு ஏழு விசில் வரை வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், அன்னாசிப்பூ பிரியாணி இலை, ஜாதிபத்ரி , எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அப்பொழுது இதில் சீரகத்தூள், மல்லித்தூள் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பின்பு அதில் சோம்பு சேர்த்து கலந்து விட்டு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொண்டு அந்த விழுதையும் தயிர் கலந்த பிறகு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இப்பொழுது அதில் காய்ச்சி வைத்துள்ள பாலை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பாலை சேர்த்த பிறகு கொதி வந்ததும்.
  • அதில் ஏழு விசில் வைத்து வேக வைத்து எடுத்து வைத்துள்ள ஆட்டுக்கால்கள் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மசாலாவுடன் கொதிக்க விடவும்.
  • இப்பொழுதுஅதில் மிளகுத்தூள், அரைத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதி வந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ருசியான ஆட்டுக்கால் பாயா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Calcium: 24.71mg | Iron: 0.21mg

இதையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் காரசாரமான ருசியில் ஆட்டு மூளை முட்டை மிளகு வறுவல் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

44 நிமிடங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

2 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

4 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

5 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

6 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

7 மணி நேரங்கள் ago