சுட்டெரிக்குற வெயிலுக்கு குளுகுளுனு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வீட்டிலேயே இளநீர் சோடா செய்து குடித்து பாருங்க உடம்பே சில்லுனு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். சூட்டை தணிக்கும் இளநீர் வைத்து ஒரு முறை இது போன்று ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
இளநீர் சோடா | Elaneer Soda Recipe In Tamil
சுட்டெரிக்குற வெயிலுக்கு குளுகுளுனு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வீட்டிலேயே இளநீர் சோடா செய்து குடித்து பாருங்க உடம்பே சில்லுனு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். சூட்டை தணிக்கும் இளநீர் வைத்து ஒரு முறை இது போன்று ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 2 people
Equipment
- மிக்சி
தேவையான பொருட்கள்
- 1 இளநீர் வழுக்கை உள்ள இளநீர் பெரியது
- 300 மில்லி சோடா
- 3 ஸ்பூன் சர்க்கரை
- 1 கப் ஐஸ் கட்டிகள்
செய்முறை
- முதலில் இளநீரையும், அதன் வழுக்கை பாகத்தையும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து மிக்சியில் வழுக்கை பாகம் மற்றும் சர்க்கரை, ஐஸ்கட்டிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்கு அடித்துக்கொள்ளவும்.
- பிறகு அதில் இளநீரை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அத்துடன் சோடாவை ஊற்றி மெதுவாக கலந்து உடனே பரிமாறவும்.