உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!

Body detox Tamil
Body detox Tamil
- Advertisement -

முன்பெல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களை மட்டுமே பின்பற்றி சாப்பிட்டு கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டங்களில் வேகமாக ஓடும் உலகத்தில் நாமும் வேகமாக ஓட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உணவுகளை உடனடியாக தயார் செய்து கொள்ள நினைக்கிறோம். ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் அரைகுறையாய் சமைத்த உணவுகளையும் ரெடிமேட் உணவுகள் என்று சொல்லி மார்க்கெட்டில் விற்பனையாகும் சில முறையற்ற உணவுகளையும் சாப்பிட்டு நம் உடலின் ஆரோக்கியத்தை நாமே குறைத்துக் கொள்கிறோம்.

-விளம்பரம்-

இது மட்டும் இல்லாமல் மேலும் கடைகளில் விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் பால கார்பேனேற்றப்பட்ட குளிர்பானங்களையே அதிகமாக குடித்து வருகின்றோம். இதனால் நம் உடல் ஆரோக்கியம் பெரிதளவு பாதிப்படைகிறது அதுமட்டுமில்லாமல் நம்ம உடம்பில் அதிக அளவில் நச்சுபொருட்களும் சேர்ந்து விடுகிறது. இன்று நம் உடம்பில் சேர்ந்த நச்சுப் பொருள்களை இயற்கையான மருந்துகளை வைத்து எப்படி வெளியேற்றுவது என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

இயற்கை மருந்துகள்

இஞ்சியின் மேற்புற தோள்களை சீவி விட்டு அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து அந்த சாரில் தேன் கலந்து தினசரி மூன்று முறை குடித்து வந்தால் நம் உடலில் உள்ள குடல் பகுதிகள் சுத்திகரிக்கப்படும். மேலும் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்காக ஆமனக்கு எண்ணெயை சிறிய அளவில் நாம் எடுத்துக் கொள்வது நான் உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து தினசரி பருகி வாருங்கள் நம் உடலில் உள்ள நச்சுகளை அனைத்தையும் கற்றாழை வெளியேற்றி விடும் மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் கற்றாழை சிறந்த மருந்தாக பயன்படும்.

இதையும் படிங்க: பூண்டின் நன்மைகள் பற்றி தெரியுமா?

-விளம்பரம்-

தவிர்க்க வேன்டிய உணவுகள்

மேலும் நாம் உடலில் உள்ள நச்சுக்களை இந்த முறைகளின் படி நீக்கும் போதும் நாம் பல உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு உணவுகள், மீன், முட்டை, ஆல்கஹால், புகை பிக்கும் பழக்கம், காஃபபின், பால் பொருட்கள், குளிர்ந்த பானங்கள், இனிப்பு பழங்கள் போன்ற உணவுகளை எல்லாம் தவிர்ப்பது நல்லது.

மேலும் பழைய உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு மாவு சார்ந்த பொருட்கள், மைக்கரோ ஓவனில் வைத்து சமைத்த உணவு பொருட்கள், வறுத்த உணவு, வினிகர் மற்றும் வினிகர் கலந்த உணவுகள், உறுகாய் புளிக்க வைத்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

டீ, காபிகளை தவிர்த்து கௌள்ளுங்கள்

வரும் நாட்களில் தினசரி மூலிகை டீ அல்லது பிளாக் டீ பருகுங்கள் இவைகள் எல்லாம் நம்மை உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்கி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவும். டீ, காபி போன்றவை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவுகளில் மஞ்சள், சீரகம், கொத்தமல்லி கடுகு போன்ற மூலிகை பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here