பூண்டின் நன்மைகள் பற்றி தெரியுமா?

- Advertisement -

நாம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டின் வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காது என்பதற்காகவே பூண்டை ஒதுக்கி விடுவார்கள். பூண்டு குழம்பு வைத்து சமையல் செய்தாலும் பெரிதாக யாரும் இப்போது எல்லாம் சாப்பிடுவது இல்லை. இப்படிப்பட்ட பூண்டில் நம் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் சாப்பிடும் உணவுகளில் பூண்டு சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வளவு பயன்கள் உள்ள பூண்டு சாப்பிடுவதால் நாம் உடலில் என்னென்ன நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் ஏற்படும் என்பதை பற்றி இந்த உடல்நலம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இளம் தாய்மார்களுக்கு

குழந்தை பெற்ற பெண்கள் பூண்டை வேக வைத்து பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பது அதிகரிப்பதோடு இந்த தாய்ப்பாலை குடிக்கும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

- Advertisement -

உடல் எடை குறைக்க

பூண்டு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடை படிப்படியாக குறைந்து விடும்.

சளி குணமாக

பாலில் நான்கு பூண்டு பற்களை சேர்த்து குடித்து வந்தால் சளி தொந்தரவு இருப்பவர்களுக்கு நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறிவிடும். மேலும் பூண்டில் இருக்கும் ஈதர் என்ற பொருள் நமது நுரையீரல் குழாயில் அடைத்திருக்கும் இருக்கும் கட்டியான சளிகளை கரைத்து வெளியேற்றி விடும். காச நோய் இருக்கும் நோயாளிகள் பூண்டு சாப்பிட்டு வந்தால் சிறந்த மருந்தாக இருக்கும்.

இரத்ததை சுத்திகரிக்கும்

நாம் அன்றாட வாழ்வில் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளில் முதல் நன்மை நம் உடலில் உள்ள இரத்தத்தைசுத்திகரிப்பதாகும். ஆம், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புகளையும் குறைத்து சிறுநீர் வழியாக உடம்பிலிருந்து வெளியேற்றிவிடும்.

-விளம்பரம்-

சக்கரை நோய்க்கு

உடம்பில் இன்சுலின் சுரப்பு கம்மியாக இருக்கும் போது சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்காது அப்படி இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் உடம்பில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோயை குறைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here