காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் உடலில் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!

- Advertisement -

நாம் காலையில் எழுந்தவுடன் தினசரி முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? முதலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு செம்பு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் எழுந்தவுடன் டி, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா என இது போன்ற பானங்களை குடிக்கின்றோம். இதுலேயும் கொடுமையான விஷயம் ஒன்று உள்ளது ஒரு சிலர் பல் துலக்காமல் கூட அப்படியே டீ காபி குடிப்பார்கள் கேட்டால் பெட் காபி நாகரிகம் என பேசுவார்கள். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களையோ, பெரியோர்களையோ காலையில் எழுந்திரித்த பின் கவனீத்து பார்த்தீர்களா என்றால் தெரியும். அவர்கள் எழுந்தவுடன் முதலில் குடிப்பது ஒரு செம்பு தண்ணீர் அது ஏன் என்று தெரியுமா ? அதில் எவ்வளவு நன்மைகள் என்று இருக்கின்ற தெரியுமா ? வாருங்கள் இந்த உடல் நலக் குறிப்புல் காணலாம்.

-விளம்பரம்-

மனித உடலுக்கு தேவையான தண்ணிர்

ஒரு நாளைக்கு கண்டிப்பாக மனித உடலுக்கு தேவையான 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. அதேபோல் வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் ஒன்றை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். சாதாரணமாகவே ஒரு நாளுக்கு நீங்கள் அவசியமாக குடிக்க வேண்டிய தண்ணீரை குடிக்கவில்லை என்றால் அதன் மூலமாக சிறுநீரக கல், உடல் வெப்பமாதல் போன்ற பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆகையால் இன்றிலிருந்து தினசரி 2 லிட்டரில் இருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் கண்டிப்பான முறையில் குடியுங்கள்.

- Advertisement -

மல பிரச்சனைகள் தீரும்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் முதல் நன்மை மலம் நன்றாக வெளியேறும் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை சுத்தப்படுத்தி தண்ணீர் குடித்து சில நிமிடங்களில் மலம் கழித்து விடுவிர்கள். இன்னும் சில நபர்களுக்கு மலம் கழிப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். அவர்கள் இனிமேல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள் பிறகு உங்களின் மல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

பசி உணர்வை தூன்டும்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலமாக பசி உணர்வு அதிகம் ஏற்படும் ஆம் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சு கிருமிகள் அனைத்தும் வெளியேற்றி உங்கள் உடலுக்கு பசி உணர்வை தூண்டும். இந்த நவீன கால கட்டங்களில் பெரும்பாலான நபர்கள் காலையில் உணவு சாப்பிடுவது கிடையாது ஏனென்று கேட்டால் பசிக்கவில்லை அதனால் சாப்பிடவில்லை என்று வியாக்கியானம் பேசுவார்கள் அவர்களிடம் இனிமேல் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க சொல்லுங்கள்.

உடல் அழகை கூட்டும்

காவைலில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலமாக தலைவலி குறைகிறது நம்மில் சில நபர்களுக்கு நீர் சத்து குறைப்பாடால். தலைவலி ஏற்படும் அவர்கள் எல்லாரும் தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து தலைவலி வராமல் இது தடுக்கும். மேலும் குடலானது சுத்தமாக இல்லாமல் இருந்தால் முகத்தை பருக்கள் வரும் அப்படி பருக்கள் வந்தால் முகம் அழகாக இருக்காது அதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள். உடல் சீராக இருந்தால் தான் அழகாகவும் இருக்கும் அதனால் தினமும் தண்ணீரை வெறும் வயிற்றில் பருகுங்கள் மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைந்து. நம் உடலில் நோய்கள் அண்டாமல் அதனை பாதுகாக்கும்.

-விளம்பரம்-

உடல் எடையை குறைக்கும்

தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமாக சுறுசுறுப்பாக இருக்க முடியுமா ? ஆம் நிச்சயம் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் ரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி பெற்று இரத்தமானது அதிக அளவிலான ஆக்ஸிஜனை கொண்டிருக்கும். இதனால் நம் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அதேபோல் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால் வெறும் வயிற்றில் வீட்டில் தண்ணீர் குடியுங்கள் உடலில் உள்ள நச்சுகளுடன் உடலில் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து. அது தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைத்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here