ருசியான கோதுமை கார போண்டா ஸ்நாகாஸாக இப்படி செய்து பாருங்க! எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது!

gothumai kara bonda
- Advertisement -

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட மொறு மொறுனு கோதுமை மாவு கார போண்டா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

-விளம்பரம்-

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

- Advertisement -
gothumai kara bonda
Print
3.67 from 3 votes

கோதுமை கார போண்டா | Gothumai Kara Bonda Recipe In Tamil

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட மொறு மொறுனு கோதுமை மாவு கார போண்டா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time5 minutes
Total Time16 minutes
Course: Breakfast, evening
Cuisine: Indian, TAMIL
Keyword: kara bonda, கார போண்டா
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ கோதுமை மாவு
  • ¼ டீஸ்பூன் சமையல் சோடா
  • 3 நறுக்கியது பெரிய வெங்காயம்
  • 7 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை 3 கொத்து பொடியாக நறுக்கியது

செய்முறை

  • முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, சமையல் சோடா, சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்கு பிசையவும். ஓரளவிற்கு கெட்டியாக இருக்குமாறு பிசைந்துகொள்ளவும்.
  • அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.