தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம்.
மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. அடர்த்தியான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்று. இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், கே, சி, ஃபோலேட், புரதம் போன்றவை நிறைந்துள்ளது. பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. செரிமானம் சீராக இருக்கவும் நச்சுப் பொருள்கள் அகற்றவும் செய்கிறது.
இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். பொதுவாகவே, மக்கள் இட்லியை பச்சையாக மாற்ற கீரையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கே நாம் பட்டாணியைப் அதில் நல்ல பச்சை நிறத்தைப் பெறவும், பச்சை இட்லி செய்யவும் பயன்படுத்துகிறோம். இது இந்தியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா மற்றும் குறிப்பாக இலங்கை போன்ற உலகின் பிற பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது. இந்த பச்சை பட்டாணி இட்லி ஒரு சைவ, பசையம் இல்லாத மற்றும் சைவ உணவு மற்றும் மிகவும் ஆரோக்கியமான செய்முறையாக கருதப்படுகிறது. இந்த பதிவில் சுவையான பச்சை பட்டாணி இட்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
பச்சை பட்டாணி இட்லி | green peas idly recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 1 கப் ரவை
- 1/2 டீஸ்பூன் ஈனோ பவுடர்
- 1/2 கப் தயிர்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை பட்டாணி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதில் பச்சை பட்டாணி விழுதை சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின்னர் மாவில் ஈனோ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அதன்பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைக்கவும்.
- அவ்வளவுதான் இப்போது சுவையான பச்சை பட்டாணி இட்லி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இட்லி, தோசையுன் சாப்பிட ருசியான ராயலசீமா உளுந்து பச்சடி இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க!!!