Advertisement
அசைவம்

குந்தாபுர் இறால் வறுவல் ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும் இப்படி செய்து பாருங்க!

Advertisement

கடல் உணவுகளில்  இறால் அப்படிங்கறது ரொம்பவே ஒரு முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த இறால் உணவுகள் ரொம்பவே சுவையான உணவுகளாக இருக்கும். பலருக்கு இந்த இறால்களை குழம்பாகவும் தொக்காகவும் சாப்பிடுவதை விட வறுவலாக சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி இன்னைக்கு நம்ம குந்தாபுர் ஸ்டைல இறால் வறுவல் எப்படி செய்வது பார்க்க இருக்கிறோம்.

இந்த குந்தாபுர்  இறால் வறுவல் ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும். இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில் எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம்.

Advertisement

இந்த இறால் உணவுகளை உணவுல மிஸ் பண்ணாம கட்டாயமா சேர்த்துக்கோங்க இது உங்களுக்கு ரொம்பவே நல்ல ஊட்டச்சத்தை கொடுக்குது. இறால் வறுவல் செய்து சாப்பிட போறோம். கடல் உணவுகள்ல அதிக அளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கிறதுனால அவை உடலுக்கு ரொம்பவே நன்மையை மட்டுமே கொடுக்கக்கூடியவைகளாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் அந்த இறால்ல இருந்து நம்ம அதோட ஓடையும் உள்ள இருக்கிற ஒரு சின்ன குடலை மட்டும் சுத்தம் பண்ணிட்டோம்னா இறால் ரொம்பவே சாப்பிடறதுக்கு  ஒரு நல்ல உணவு பொருள். சுத்தம் பண்ணிட்டு எடுத்துக்கும்போது மட்டும் கொஞ்சம் பார்த்து சுத்தம் பண்ணி எடுத்துக்கணும். சரி இப்படி சுவையான நிறைய சத்துக்கள் உடைய இந்த இறால்ல குந்தாபுர் ஸ்டைல்ல இறால் வறுவல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

குந்தாபுர் இறால் வறுவல் | Gundapur Prawn Fry In Tamil

Print Recipe
குந்தாபுர் இறால் வறுவல் ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும். இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில்
Advertisement
எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம். சரி இப்படி சுவையான நிறைய சத்துக்கள் உடைய இந்த இறால்ல குந்தாபுர் ஸ்டைல்ல இறால் வறுவல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine andhra
Keyword Guntapur Prawn Fry
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 105

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ இறால்
  • 2 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 5 காய்ந்த மிளகாய்
  • 5 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் புளி கரைசல்
  • 10 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய், முந்திரியை கண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா விதைகள் , மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கசகசாவை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வறுத்து வைத்துள்ள இவைகளை ஆற வைதது ஒருமிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊற வைத்து எடுத்துள்ளகாய்ந்த மிளகாய், முந்திரி சேர்த்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் புளி கரைசல், பூண்டு வெல்லம் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • இதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள இறால்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இந்த இறால்களை மூடி போட்டு வேக வைக்கவும் இறால் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
  • இறால் நன்றாக சுருள வெந்து வந்த பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுப் சூடாக பரிமாறினால் சுவையான குந்தாபுர் இறால் வறுவல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg
Advertisement
Prem Kumar

Recent Posts

புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.…

43 நிமிடங்கள் ago

உருளைக்கிழங்கு வச்சு சூப்பரா இல்ல உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க அவங்க ரொம்ப ரொம்ப விரும்பி…

7 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு பிடிச்ச மசாலா பாஸ்தா இந்த மாதிரி ஸ்டைல்ல செஞ்சு கொடுங்க!

என்னதான் நம்ம குழந்தைகளுக்கு பார்த்து ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப புடிச்சது அப்படின்னா அது பாஸ்தா மேகி…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூன் 2024!

மேஷம் சிலருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். உறவுகளில் இனிமையும், பரஸ்பர…

14 மணி நேரங்கள் ago

மாணவர்கள் நன்கு படிக்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்றாலும் தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு…

1 நாள் ago

சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

1 நாள் ago