Advertisement
ஆன்மிகம்

குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவரா நீங்கள் ? குரு தோஷம் நீங்க எளிய பரிகாரம்!

Advertisement

நாம் நவகிரகங்களில் தோஷங்களை பற்றி பேசும் பொழுது அதிகமாக பேசுவது ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் தான் மற்றவைகள் கிரகங்களின் பார்வையினால் ஏற்படும் பலன்களுக்கு பரிகாரம் செய்திருப்போம். ஆனால் இப்பொழுது குருவின் தோஷத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த குரு தோஷம் என்பது எப்படி வரும் என்றால் ஒருவரது ஜாதகத்தின் படி குருவின் பார்வை அல்லது நல்ல வீட்டில் இருக்கும் பொழுது அவரை விட யாரும் அதிக நற்பலன்களை கொடுத்து விட முடியாது.அவர் அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக இருப்பார்.அவரே அசுப கிரகங்களோடு சேர்க்கை ஆகும் பொழுதும் கட்டத்தில் தவறான இடத்தில் அவரின் பெயர்ச்சி இருக்கும்பொழுதும் அவரது பார்வை படாத இடங்களாக இருக்கும் பொழுதும் அவரை விட வேறாரும் மோசமான விளைவுகளை கொடுக்க மாட்டார்கள். “குருவின் பார்வையை கோடி நன்மை தரும்” என்பது போல் அவர் பார்வை பட்டால் மட்டும் தான் திருமணம், குழந்தை பேரு, செல்வங்கள் என அனைத்து நன்மைகளும் கிடைக்கும் . புத்திகாரகன் தனகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஒருவரது வாழ்க்கையில் அவர் சம்பாதிக்கும் பணத்திற்கும் குழந்தைகளின் பலன்களுக்கும் காரணமாக இருக்கிறார். இதில் மற்ற கிரகங்களில் பார்வை ஒருவரோடு ஒருவர் பார்த்துக் கொள்வது போல் இருக்கையில் கூட சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கும். அப்படி குருவின் தோஷத்தால் ஏற்படும் பலனை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது என்பதை பார்க்கலாம். குரு தோஷ நிவர்த்தி செய்து கொள்வதற்கு வியாழக்கிழமை தோறும் விரதங்கள் இருந்து மஞ்சள் பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது சாஸ்திரங்கள். எந்த மாதிரியான பரிகாரங்களை செய்து குருவின் தோஷம் அல்லது சாபத்திலிருந்து விடுதலை அடையலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

குரு தோஷம் அல்லது சாபம் என்றால்
என்ன?

குரு என்பது தேவர்களின் குருவான பிரகஸ்பதியை குறிக்கின்றது. அவர் நவகிரகங்களில் ஒன்றாக இருக்கிறார். அப்படி ஒருவரது ஜாதகத்தின் படி குரு எந்தக் கட்டத்தில் இருக்கிறார் அவர் எந்தெந்த இடங்களை பார்க்கிறார் என்பதை பொறுத்தே சுப பலன்களும் அசுப பலன்களும் ஒரு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். அப்படி அவருடைய பார்வையும் மற்ற ராசியினுடைய சேர்க்கையும்

Advertisement
சரியாக இல்லாத பட்சத்தில் அது குரு உடைய தோஷம் அல்லது குரு சாபம் என்று அழைக்கப்படுகிறது.
Advertisement

அது மட்டுமல்லாமல் நமக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் குரு நம்மை பெற்ற பெற்றோர்கள் இவர்களின் மனதில் ஏற்படும் வருத்தங்களும் நமக்கு சாபமாக இருக்கிறது இதுவும் குருவின் சாபம் அல்லது குருவின் தோஷம் என்று கூறப்படுகிறது.

குரு தோஷ நிவர்த்தி

இந்த குருவின் தோஷத்தை நிவர்த்தி

Advertisement
செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் குருபூர்ணிமா தினத்தன்று மட்டும் குருபூஜை செய்யாமல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்து குரு பகவானை மகிழ்விக்க வேண்டும். அது மட்டுமல்லாது ஞான குருவாகிய குரு தட்சணாமூர்த்தியை வழிபட்டு வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலமும் குருவின் மனம் திருப்தி அடையும் .

கங்கை ஸ்நானம் அல்லது வேறு ஏதோ ஒரு புனித நதிகளில் நீராடி அங்கு இருப்பவர்கள் யாருக்காவது மஞ்சள் நிற பொருட்களை கொடுப்பதும் தோஷ நிவர்த்திக்கு ஒரு வழியாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து மஞ்சள் வஸ்திரம் அணிந்து பூஜை செய்து அந்த பூஜை பொருட்களில் மஞ்சள் நிற பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

ஒரு ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் இருந்தால் அவருக்கு பணக்கார யோகம் கோடீஸ்வரனாக இருக்கும் வாய்ப்பு அனைத்திலும் முதன்மையாக இருக்கும் வாய்ப்பு போன்றவை கிடைக்கும். அதே குருவின் ஆதிக்கம் நீச்சத்திலிருந்து அப்படியே தலைகீழ் பலன்கள் கிடைக்கும். ஆகவே யாருடைய ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் நீச்சமாக இருக்கிறதோ அவர்கள் வியாழக்கிழமை தோறும் எளிய பரிகாரமாக குருதட்க்ஷணாமூர்த்திக்கு விரதம் இருந்து மஞ்சள் நிற பொருட்கள் அதாவது நெய்வேதியம் செய்ய மஞ்சள் நிறமான லட்டு அல்லது வாழைப்பழம் இது போன்ற மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொருட்களை கோவிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானமாகவாவது கொடுத்து குருவின் மனதை சாந்தி அடையச் செய்து நற்பலன்களை பெற்று கொள்வீர்களாக.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago