Advertisement
அழகு

முடி கொட்டுவது இயல்பானதா?

Advertisement

முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது.குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இதனால் அவர்கள் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. இந் நிலையில் முடியின் இயல்பான வளர்ச்சி, முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவது ஏன், முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை உண்டா என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த நிவாரணத்தைப் பெற முடியும்.

முடி கொட்டுவது இயல்பானதா?

Advertisement

தலை முடியின் வளர்ச்சிக் காலம் 2 முதல் 6 ஆண்டுகள். ஒவ்வொரு முடியும் 1 செ.மீ. அளவுக்கே வளரும். மண்டை ஓட்டில் முடி முளைத்து, 2 அல்லது 3 மாதங்களில் தானாக உதிர்வது இயல்பானது. முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும். ஆனால், சில காரணங்களால் நாள் ஒன்றுக்கு 20 முடி கொட்டினால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நிலையில் முடி கொட்டுவதைத் தடுக்க முடியும்.

Advertisement

முடி கொட்டக் காரணம் என்ன?

பரம்பரைத் தன்மை, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமலிருப்பது, சுகாதாரமற்ற முறையில் தலை முடியை வைத்திருப்பது, தைராய்டு நோய், குழந்தை

Advertisement
பிறப்பு, நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகள், நோய்த் தொற்று, புற்று நோய், ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி கொட்டலாம்.

முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை என்ன?

காரணத்தைக் கண்டுபிடித்து விடும் நிலையில் சிகிச்சை அளிப்பது எளிதானது. மருந்துகள் காரணமாக முடி கொட்டினால், மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நோய்த் தொற்றைப் போக்க சிகிச்சை அளிக்கும் நிலையில், முடி கொட்டுவது நின்று விடும். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையைச் சரி செய்யும் நிலையிலும் முடி கொட்டுவது நின்று விடும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

11 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago