மறந்தும் கூட பெட்ரூமை வீட்டின் இந்த திசையில் கட்டிவிடாதீர்கள் மிகப்பெரிய பிரச்சனை வரும்! வாஸ்து சாஸ்திரத்தின் படி கட்ட வேண்டிய திசை எது!

- Advertisement -

பொதுவாக நாம் வீடு கட்டும் பொழுது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் திசை மற்றும் வீட்டில் உள்ள மற்ற இடங்களின் திசையையும் பார்த்து தான் கட்ட வேண்டும். அப்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வீட்டில் அனைத்து அறைகளையும் கட்டினால் தான் நம் வீட்டில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் நம் வீட்டில் பெட்ரூம் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரத்தின் படி தான் கணித்து ஜோதிடர்கள் சொல்வார்கள். அதன்படி நாம் கட்டினால் நம் வீட்டில் செல்வம் செழிக்கும் மற்றும் நிம்மதியும் நல்ல வாழ்க்கையும் அமையும்.

- Advertisement -

தென்மேற்கு திசை

நம் வீட்டில் படுக்கையறை தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் தான் இருக்க வேண்டும். அப்படி அந்த திசைகளில் இருந்தால் மட்டுமே நம் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையும் அமையும். வீட்டின் வட கிழக்கு திசையில் படுக்கையறை இருக்கக் கூடாது ஏனெனில் வடகிழக்கு திசையில் பூஜை அறை தான் இருக்க வேண்டும் அதேபோல் தென்கிழக்கு திசையிலும் படுக்கையறை இருக்கக் கூடாது அது சமையலறைக்கான திசை மேலும் சமையல் அறையில் மற்றும் படுக்கையறை இரண்டும் பக்கத்தில் இருக்கக் கூடாது அது வீட்டில் சண்டைகளை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி நம் படுக்கை அறையில் படுக்கை எப்பொழுதும் மரத்தால் ஆனதே செய்ய வேண்டும். வழக்கம் போல் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் படுக்கை இருக்க வேண்டும். மேலும் நாம் தூங்கும் போது தலையை தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கி தான் வைக்க வேண்டும். படுக்கை அறையில் படுக்கை வடக்கு திசை நோக்கி இருந்தால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கும் அதனால் ஒரு பொழுதும் வடக்கு திசை நோக்கி வைக்கக் கூடாது.

கிழக்கு மேற்கு திசை

படுக்கை அறையில் கதவு கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையை நோக்கி தான் இருக்க வேண்டும். மேலும் படுக்கையறையின் கதவு 90 டிகிரி கோணத்தில் முழுவதுமாக திறக்கும் படி அமைத்து வைக்க வேண்டும். படுக்கை அறையில் ஜன்னல் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி திசையில் தான் இருக்க வேண்டும். எப்பொழுதும் படுக்கைக்கு முன்னே கண்ணாடியை வைக்கக்கூடாது அது வீட்டிற்கு தீங்கினை விளைவிக்கும். படுக்கை அறையில் சுவர்களில் நீலம் பச்சை மஞ்சள் அல்லது வெள்ளை நிறங்களில் தான் இருக்க வேண்டும் அது படுக்கை அறைக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் எதிரிகள் என்ன செய்தாலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா ? சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்!!

-விளம்பரம்-