Advertisement
சைவம்

எந்த வகையான சாப்பாட்டுக்கும் ஏற்ற ருசியான பலா பிஞ்சு பொரியல் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும் போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

பலாப்பழம் பெரிதாக வளர்வதற்கு முன்பாக பிஞ்சாக இருக்கும்போதே அதை துண்டுகளாக்கி பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் பலாக்காயை நாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான வெப்ப மண்டலப் பகுதிகளி்ல் பலா அதிகமாக விளையும்.

Advertisement

இந்த பலா பிஞ்சைப் பறித்து அதை தோல் சீவி, மற்ற காய்கறிகளைச் சமைப்பது போல கூட்டு செய்து சாப்பிடுவார்கள். இந்தியாவில், இது வடக்கு முதல் தெற்கு வரை அனைத்து வழிகளிலும் பிரபலமாக உள்ளது. லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கேன்சர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

பலா பிஞ்சு பொரியல் | Jackfruit Stir fry Recipe In Tamil

Print Recipe
பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்
Advertisement
போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். பலாப்பழம் பெரிதாக வளர்வதற்கு முன்பாக பிஞ்சாக இருக்கும்போதே அதை துண்டுகளாக்கி பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Jack fruit Stir Fry
Prep Time 1 hour 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 23.5

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 பலா பிஞ்சு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு தேவைக்கு
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு

Instructions

  • முதலில் பலா பிஞ்சை கட் பண்ணி நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும். பின் குக்கரில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  • பின் தேங்காய்,பச்சைமிளகாய், வெங்காயம்,சோம்பு, பூண்டு போட்டு அரைத்துக்கொள்ளவும்.
  • வேக வைத்த பலா பிஞ்சை ஆறவிடவும். பின் அது ஆறவும் நன்கு உதிர்த்து விடவும். நாம் அரைத்து வைத்ததை சேர்த்து கிளறி விடவும்.
  • பின் வேறு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.
     
  • உதிர்த்த பலா பிஞ்சு, அரைத்ததைச் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும். தேங்காய் வாசம் வரும் போது அடுப்பை அணைத்து விடவும். சுவையான பலா பிஞ்சு பொரியல்ரெடி. சுவைத்து மகிழுங்கள்.
     

Nutrition

Serving: 300g | Calories: 23.5kcal | Protein: 1.72g | Fat: 0.64g | Sodium: 3mg | Potassium: 303mg | Vitamin A: 110IU | Vitamin C: 13.7mg | Calcium: 34mg | Iron: 0.6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

6 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

13 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

21 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago