மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து,
இதையும் படியுங்கள் : நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி உளுந்தங்களி இப்படி செஞ்சி பாருங்க!
முழுதாக வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான சிற்றுண்டி! இதில் கருப்பட்டி சேர்த்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தரும். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காரைக்குடி நண்டு மசாலா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கருப்பட்டி மோதகம்| Karupatti Mothagam Receipe in Tamil
Equipment
- 1 இட்லி பாத்திரம்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் பச்சரிசி
- 50 கிராம் கருப்பட்டி
- 1 cup துருவிய தேங்காய்
- 2 tbsp நெய்
- ¼ tsp ஏலக்காய் பொடி
- உப்பு சிறிதளவு
செய்முறை
- பச்சரிசியை நன்றாக ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் பூரணத்திற்கு துருவிய தேங்காய், கருப்பட்டி, ஏலக்காய் கலந்து தயாரித்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் நெய், உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கிளற வேண்டும்.
- அதனை இளம் தீயில் கையில் ஒட்டாதபடி வதக்க வேண்டும். இப்படி வதக்கிய மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு இடுவது போல வட்டங்களாக இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடவும்.
- உருண்டைகளாக இட்ட கொழுக் கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுங்கள். சுவையான கருப்பட்டி மோதகம் ரெடி.