கீரை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த கீரையை சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை
இதையும் படியுங்கள்: மென்மையான பாலக்கீரை சப்பாத்தி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீரை மண்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கீரை மண்டி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேரளா கீரை மண்டி | Keerai Mandi Recipe in Tamil
Equipment
- கடாய்
- கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 kattu முளைக்கீரை
- 7 சிறிய வெங்காயம்
- 1 cup தேங்காய்ப் பால்
- 4 பச்சை மிளகாய்
- 1 tsp கடுகு
- 1 tsp உளுந்தம்பருப்பு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- கீரை மண்டி செய்ய முதலில் வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். முளைக்கீரையைத் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம்பருப்பையும் போட்டுத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் முளைக்கீரையைப் போடுங்கள்.
- நீரை ஊற்றிக் கிளறிவிட்டு வேகவிடுங்கள். கீரை வெந்ததும் உப்பைப் போட்டு மீண்டுமொரு முறை கிளறிவிட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடுங்கள். சுவையான கீரை மண்டி தயார்.