சீறுநீரக் கல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா…வாருங்கள் பார்க்கலாம்….

- Advertisement -

சிறுநீரக‌ கல் என்பது சிறுநீரக‌த்தில் உள்ள உப்பு மற்றும் தாதுக்கள் சிறுநீருடன் வெளியே செல்லாமல் சிறுநீரக பையிலே தேங்குவதன் மூலம் ஏற்படுகிறது.. இந்த கற்கள் பொதுவாக சிறுநீர் பாதையில் நகரும்போதோ அல்லது சிறுநீர் போவதை தடைசெய்யும்போதோ மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன. சிறுநீரக கற்களின் அளவு வேறுபடுகின்றன. சில கற்கள் சில மிமீ அளவு இருக்கக்கூடும், மற்றவை அங்குலங்கள் வரை வளரக்கூடும். சிறுநீரக கற்கள் பொதுவாக வரக் கூடியவை அவை ஆண், பெண் இருவரையும் பாதிக்கும். சிறுநீரக கற்களை கால்சியம் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் மற்றும் சிஸ்டைன் கற்கள் என நான்கு முக்கிய வகைகளாக பிரிக்கலாம்.

-விளம்பரம்-

காரணங்கள் :-

- Advertisement -

சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள் மூலமாகவும் சிறுநீரக பகுதியில் கல் உன்டாக ஆதிக வாய்ப்பு உள்ளது. வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் போன்றவை மூலமும் சிறுநீரக கல் ஏற்படும். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இதன் மூலமாகவும் சிறுநீரக பையில் கல் உண்டாகும்.

வெப்பமான சுற்று சூழலில் இருப்பதால் :-

அதிகப்படியான நேரம் மின்னணுப் பொருட்கள் மத்தியில் பணிபுரிவது மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்றவையும் சிறுநீரகக் கல் உருவாக அதிகமான வழிகளில் வழிவகுக்கும். சுற்றுச்சூழல் சீர்கேடும் இதில் முக்கியக் பங்கு வகிக்கிறது. அதிக வெப்பமான பகுதி, கனநீர் அல்லது நீரில் பாஸ்பரஸ் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்குச் சிறுநீரகக் கல் உருவாக வாய்ப்புள்ளது.

-விளம்பரம்-

அறிகுறிகள் :-

  1. பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
  2. குமட்டல், வாந்தி
  3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  4. சிறுநீர் அளவு அதிகரித்தல்
  5. சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  6. அடிவயிற்றில் வலி
  7. வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  8. இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  9. ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் வலி
  10. சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்

சிறுநீரகக் கல்லுக்கு சாப்பிட வேன்டியது :-

தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள் பூசணி, வெண் பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர்,
நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.

-விளம்பரம்-

சிறுநீரகக் கல்லுக்கு சாப்பிட கூடாதது :-

ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.

சிறுநீரகக் கல் சிகச்சை (ENGLISH) :-

ஈ.எஸ்.டபிள்யூ.எல்(Extracorporeal Shock Wave Lithotripsy) :-

சிறுநீரகக் கற்களை சிறு துண்டுகளாக உடைக்க இது அதிர்ச்சி அலைகளைப் பயன்படுத்துகிறது, அவை சிறுநீர் பாதை வழியாக நகர்ந்து உடலில் இருந்து வெளியேறும்.

யுஆர்எஸ் (Ureteroscope) :-

இதில், யூரெட்ரோஸ்கோப் என்னும் கருவியினை சிறுநீர் பாதையில் செலுத்தி, சிறுநீர் குழாய்(Ureters) கற்களை லேசர் கொண்டு அகற்றப் படும்.

ஆர்.ஐ.ஆர்.எஸ் (Retrograde Intra Renal Surgery):-

மேல் சிறுநீர்க்குழாய் மற்றும் சிறிய சிறுநீரக கற்களை அகற்ற நெகிழ்வான யூரெட்டோரோஸ்கோப்பைப் பயன்படுத்தி சிறுநீரகத்திற்குள் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஒரு செயல்முறையாகும்.

பி.சி.என்.எல் (Percutaneous Nephrolithotomy):-

இது சிறுநீரகத்தில் உள்ள பெரும் கற்களை முதுகில் சிறு துளையிட்டு நீக்கும் செயல்முறை.

சித்த மருத்துவம் :-

யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.

ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.

கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.

ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here