உதடுகள் நிறமாகவும், மெண்மையாக இருக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள் ?

- Advertisement -

அகத்தின் அழகைவிட உள்ளத்தின் அழகை தான் பார்க்க வேண்டும் என்று நாம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். நாம் நமது முக அளவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் நம் முகத்தில் கருப்பு நிறம் இருந்தால் ஏற்றுக் கொள்வது கிடையாது. மேலும் நம் முகத்தில் பருக்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்வது கிடையாது உடனடியாக அதை போக்கிவிட வேண்டும் என்பதுதான் நம் முதல் வேலையாக இருக்கும் அதற்காக பல விதமான ரசாயனம் கலந்த ஆழகு பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம்.

இதையும் படியுங்கள் : முகத்திற்கு அதிக அழகு சேர்க்கும் வேப்பிலை சோப் செய்வது எப்படி ?

- Advertisement -

அதையும் தாண்டி செயற்கையாகவும் பல்வேறு கட்ட வேலைகளை முக அழகுக்காக செய்ய தொடங்கி விட்டோம். இப்படி நம் முகத்தில் நல்ல நிறமாகவும் ,மென்மையாகவும் வைக்க நினைக்கும் உதடுகளும் அடங்கும். அது மட்டுமில்லாமல் நமது முகம் வெள்ளையாகவும் பொலிவுடன் இருந்தாலும் சில நபர்களுக்கு உதடுகள் கருமையாகவும் வறட்ச்சியாகவும் காணப்படும். ஆம் என்று இயற்கையான வழியில் எப்படி உதடுகளை நிறமாகவும் மென்மையாகவும் மிருதுமாகவும் வைத்துக் கொள்ளவது என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. Youtube Sub

-விளம்பரம்-

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதை தேனுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து. அதை நாம் வறட்சியான மற்றும் நிறம் இல்லாத உதட்டின் மேல் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்கள் நன்றாக உலர விட்டு. பின்பு தண்ணீரால் கழுவிக் கொண்டால் நம் உதடுகளுக்கு நிறத்தை கொடுத்து மேலும் உதடுகளை மென்மையாகவும் மிருதமாகவும் மாற்றும்.

பால், மஞ்சள்

தூய்மையான காய்ச்சாத பசும பாலை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது அளவு மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து. அதை நாம் உதடுகளில் கருமை நிறம் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து விட்டு அதன் பின்பு பேஸ்ட் உலர்ந்த உடன் குளிர்ந்த நீரைக் கொண்டு அதை கழுவி எடுத்தால். நம் உதடுகளின் நிறம் மாற தொடங்கிவிடும் இப்படியே வாரத்திற்கு மூன்று நாட்கள் என தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்.

பீட்ரூட், கேரட்

நாம் வீட்டில் உள்ள கேரட் அல்லது பீட்ரூட் காய்கறிகளை தேங்காய் துருவது போல் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அந்த துருவிய துருவளை ஒரு கைப்பிடி எடுத்து பிழிந்தால் அதிலிருந்து சாறு கிடைக்கும் அந்த சாறை ஒரு பவுளில் சேகரித்து உங்கள் உதட்டின் மேல் தொடர்ந்து தடவி வந்தால் உங்களது உதடுக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.

ரோஜா இதழ்

ரோஜா இதழ்களை நன்றாக மை போல அரைத்து இதனுடன் சிறிதளவு எலும்பிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு கலவை தயார் செய்து கொள்ள வேண்டும். தினசரி இரவு உறங்குவதற்கு முன் இந்த கலவையை உதட்டில் அப்ளை செய்து வந்தால். உதட்டில் கருமையை நீக்கி இளஞ்சிவப்பு நிறம் தரும் மேலும் உதட்டை பொலிவுடன் மென்மையாக வைத்து இருக்கவும் உதவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு எடுத்து அதை பாதாம் எண்ணெயில் கலந்து இந்த கலவையை நாம் உதட்டில் நன்றாக தடவி அது உலரும் வரை காத்திருந்து பின் மற்றொரு முறை அதன் மேல் மறுபடியும் எலுமிச்சை சாறை அப்ளை செய்து. நன்றாக உலர்ந்த பின் குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தால் நமது உதடுகள் இயற்கையாகவே நிறம்பெறும். ஆனால் வெறும் எலுமிச்சைச் சாறை பயன்படுத்தக்கூடாது அதனுடன் பாதம் எண்ணெய்யை கலந்து பயன்படுத்தி கொண்டால் பலன் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here