நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை ஒவ்வொரு காலகட்டங்களிலும் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும் பின்னும் பல அர்த்தங்கள் இருந்து காரியங்களுக்கும் வருகிறது. அதை அவர்கள் விளக்கி கூறாமல் சென்றது தான் தவறான விஷயம். உதாரணமாக – பருவமழை ஆரம்ப காலத்தில் நோய்கள் பரவும் தன்மை அதிகமாக இருக்கும்.
ஆகையால் அந்த நேரத்தில் சாமியின் பெயரை சொல்லி உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் கூலையும், நோயை தவிர்க்கும் வேப்பிலைகளையும் வீடுகள் கோவில்கள் என அனைத்து இடங்களிலும் கட்டி வைத்தார்கள் பின்பு இதற்கு ஆடி திருவிழா என்று பெயரும் அமைத்தார்கள். இது போன்ற அவர்கள் ஒரு விஷயத்திற்கு பின்னால் பல அர்த்தம் வைத்துள்ளனர் இன்றைய பதிவில் நாம் இப்படி நம் முன்னோர்களால் அதிகமாக பயன்படுத்திய வேப்பிலையை வைத்து முகத்திற்கு ஆழகு தரும் வேப்பிலை சோப் எப்படி தயாரிப்பது பற்றி இந்த உடல்நல தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :-
2 டீஸ்பூன் – வேப்பிலை பொடி
50 ML – தேங்காய் எண்ணெய்
20 ML – வேப்ப எண்ணெய்
10 ML – காஸ்டிக் சோடா
20 ML – தண்ணீர்
செய்முறை 1 :-
முதலில் காஸ்டிக் லே தயாரிக்க வேண்டும் அதற்காக காஸ்டிக் சோடாவை எடுத்துக் கொண்டு அதன் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் தொடாமல் அப்படியே வைக்க வேண்டும்.
செய்முறை 2 :-
பின்பு தேங்காய் எண்ணெயும், வேப்ப எண்ணையும் ஒரு பவுலில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்பு இதனுடன் வேப்பிலை பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 3 :-
இப்போது நான்கு மணி நேரம் ஆன பின்பு காஸ்டிக் லேவை எடுத்து கட்டிகள் இல்லாமல் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள் பின்பு நாம் தயார் செய்து வைத்தார் கலவையை இதனுடன் சேர்த்துக்கொண்டு நன்றாக கலந்து விடவும்.
செய்முறை 4 :-
பின்பு காஸ்டிக் லேயில் கலந்த பிறகு கட்டியாக வரும் வரை கலக்கி கொண்டு இருக்கவும் பின்பு சோப் சைஸ்க்கு இருக்கும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றவும்.
செய்முறை 5 :-
பாத்திரத்தில் ஊத்திய பின்பு சோப் ரெடி ஆவதற்கு 12 மணி நேரங்களுக்கு மேல் ஆகும் ஆகையால் இந்த கலவையை நீங்கள் இரவு தயாரித்து வைத்துவிட்டு தூங்கினால் காலையில் சோப் தயாராகிவிடும்.
செய்முறை 6 :-
பிறகு 12 மணி நேரம் ஆகிய பின்பு பாத்திரத்தில் இருந்து சோப்பை எடுத்து நீங்கள் ஒரு மாத காலம் இந்த சோப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சோப் பயண்படுத்துவதால் முகத்தில் பருக்கள் வராது .சருமம் பொலிவுடன் அழகாக இருக்கும்.