Advertisement
அசைவம்

மணத்தக்காளி புளிகுழம்பு செய்வது எப்படி ? இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக செய்து கொடுங்கள்.

Advertisement

தினசரி வீட்டில் செய்யும் கத்திரிக்காய் புளிக்குழம்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, முருங்கக்காய் புளிக்குழம்பு, வெங்காய குழம்பு இந்த நான்கு புளிகுழம்பு தான் மாறி மாறி வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறோம். சற்று வித்தியாசமாக மணத்தக்காளி பூண்டு குழம்பு இதை ஒருநாள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பாக இருக்கும். இதில் ஒரு முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஒரு மருத்துவ குணம் உள்ளது புதியதாக பிரசவித்த பெண்கள் இந்த குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பது அதிகமாக சுரக்கும். இதை முன்பே பிரசவித்த பெண்களுக்கு நம் முன்னோர்கள் அடிக்கடி வீட்டில் செய்து கொடுக்கும் ஒரு உணவாகும். இதை எப்படி செய்வது தேவையான, பொருட்கள், மற்றும் செய்முறைள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம்.

Advertisement

மணத்தக்காளி புளிகுழம்பு செய்வது எப்படி ? இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக செய்து கொடுங்கள்……

Print Recipe
தினசரி வீட்டில் செய்யும் கத்திரிக்காய் புளிக்குழம்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, முருங்கக்காய் புளிக்குழம்பு, வெங்காய குழம்பு இந்த நான்கு புளிகுழம்பு தான் மாறி மாறி வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறோம். சற்று வித்தியாசமாக மணத்தக்காளி பூண்டு குழம்பு இதை ஒருநாள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பாக இருக்கும். இதில் ஒரு முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஒரு மருத்துவ குணம் உள்ளது புதியதாக பிரசவித்த பெண்கள் இந்த குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பது அதிகமாக சுரக்கும். இதை முன்பே பிரசவித்த பெண்களுக்கு நம் முன்னோர்கள் அடிக்கடி வீட்டில் செய்து கொடுக்கும் ஒரு உணவாகும். இதை எப்படி செய்வது தேவையான, பொருட்கள், மற்றும் செய்முறைள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword மனத்தக்காளி புளி குழம்பு
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 5

Equipment

  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்

Ingredients

  • 5 tbsp மணத்தக்காளி வற்றல்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பற்கள் பூண்டு                          
  • 1 தக்காளி                      
    Advertisement
  • 2 tbsp புளிகுழம்பு மசாலா பொடி
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிப்பதருக்கு

  • 5 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு                            
  • 1 tbsp வெந்தயம்
  • 1 tbsp சோம்பு
  • கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  • செய்முறை
  • குழம்பை தயார் செய்வதற்கு முன்பு ஒரு எலுமிச்சை பழத்தின் அளவு புளி எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் விடவும்.
  • எண்ணெய் காய்ந்தவுடன் தாளிப்பதற்காக வைத்துள்ள கடுகு, வெந்தயம்,சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் அதன் பின்பு வெங்காயத்தையும் போட்டு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கிக் கொண்டே இருக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.தக்காளி, பூண்டு பச்சை வாடை போகும் வரையில் வதக்கவும்.
  • அதன் பின்பு ஊற வைத்துள்ள புளியை கரைத்து ஊத்தவும் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு புளிக்குழம்பு மசாலா பொடி போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குழம்புபை மூடி வைத்துவிடுங்கள்.
  • மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மணத்தக்காளி வற்றலை என்னை காய்ந்தவுடன் அதில் போட்டு பொறித்து எடுத்து குழம்பு கொதித்த உடன் அதில் போடவும்.
  • அதன் பின்பு குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும் இப்போது சுவையான மணத்தக்காளி புளிக்குழம்பு தயார் ஆகிவிட்டது.

Nutrition

Carbohydrates: 29.8g | Protein: 6.3g | Fat: 0.1g | Fiber: 0.8g | Vitamin C: 13mg | Calcium: 30mg | Iron: 1.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

28 நிமிடங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

4 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

4 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

4 மணி நேரங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

7 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

7 மணி நேரங்கள் ago