Home ஸ்நாக்ஸ் நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?

நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்கள் இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?

மரவள்ளிக்கிழங்குயில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கண் பார்வை பிரச்னை பெரியவர்களுக்குமட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர்கொண்ண்டு வருகிறது.

இப்படி இவளவு நன்மைகள் இருக்கும் போது இந்த மரவள்ளிக்கிழகை வைத்து மசால் வடை செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்க

-விளம்பரம்-
Print
3.50 from 2 votes

மரவள்ளிக்கிழங்கு மசால் வடை | Maravalli Kilangu Masalvadai Recipe in Tamil

சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்றது என தெரியாதவர்களுக்கு இந்த வடை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கிழங்குகளில் அதிகம் கவனம் பெறாத அதே நேரம் அதிக சுவையான கிழங்கு மரவள்ளிக்கிழங்குதான்.குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகா செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மரவள்ளிக்கிழங்குயில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோகியதை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கண் பார்வை பிரச்னை பெரியவர்களுக்குமட்டும் அல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கும் கூட எதிர்கொண்ண்டு வருகிறது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: tapioca vada, மரவள்ளிக்கிங்கு மசால் வடை
Yield: 4 people
Calories: 100kcal

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக்கிழங்கு கால் கிலோ
  • 200 கிராம் ஊறவைத்த கடலைப்பருப்பு
  • பச்சரிசி மாவு ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி ஒரு இன்ச் துண்டு {தோல் சீவவும்}
  • 10 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • பட்டை சிறு துண்டு
  • 2 கிராம்பு
  • 4 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • புதினா ஒரு கைப்பிடி அளவு
  • 100 கிராம் வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 500 மில்லி எண்ணெய்

செய்முறை

  • மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இந்த வடையை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Nutrition

Serving: 4g | Calories: 100kcal | Carbohydrates: 26g

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here