- Advertisement -
ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்து பாருங்க புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக மரவள்ளிக் கிழங்கு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும்.இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா?
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!
- Advertisement -
உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும்.சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மரவள்ளிக் கிழங்கு புட்டு | Maravalli Kizhangu Puttu Recipes in Tamil
மரவள்ளிக் கிழங்கு புட்டு ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்து பாருங்க ! புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக மரவள்ளிக் கிழங்கு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும்.இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Yield: 4 People
Calories: 544kcal
Equipment
- 1 புட்டு பாத்திரம்
- 1 பெரிய பவுல்
தேவையான பொருட்கள்
- 1 Kg மரவள்ளி கிழங்கு
- 1 1/2 கப் தேங்காய் துருவியது
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துருவிக் கொண்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
- பின் அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதற்குள் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
- பின்பு புட்டு குழலை எடுத்துக் கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.
- பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!குறிப்பு : நாட்டு சர்க்கரை சேர்த்தோ உள்ளது கடுகு காய்ந்தமிளகாய் தாளித்தோ சாப்பிடலாம்
Nutrition
Serving: 1Kg | Calories: 544kcal | Fat: 67g | Cholesterol: 1.5mg | Sodium: 67mg