Advertisement
சைவம்

வீடே மணமணக்க காரசாரமான ருசியில் மசாலா கிச்சடி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

Advertisement

காலை சிற்றுண்டி ஒருவருக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் பலரும் தங்களுக்கு இருக்கும் நேரமின்மையால் அதை உண்ணாமலே வெளியில் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் தயாரித்து சாப்பிடும் சிற்றுண்டி கிச்சடி ஆகும். தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான உணவுகளாக உள்ளன. இருப்பினும், எப்போதும் இட்லி, தோசை என சாப்பிட்டு சில நேரங்களில் நமக்கே போர் அடிக்கும். இதற்கு தீர்வு தரும் சிறந்த காலை உணவு தேர்வாக கிச்சடி‌ உள்ளது.

கிச்சடி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவாகும். கிச்சடிக்கு தேவையான விஷயங்களை தயாராக வைத்தால் போதும், டக்குனு 10 நிமிஷத்தில் காலை உணவை செய்திடலாம். கிச்சடியை டிபன் சாம்பார் அல்லது தேங்காய் சட்னி உடன் பரிமாறினால் அற்புதமாக இருக்கும். காலை உணவிற்கு உப்புமா என்று சொல்லி இனிய காலை பொழுதை போரிங் ஆக மாற்ற வேண்டாம்.

Advertisement

உணவுக்கு சுவையை விட மிக முக்கியம் பெயர் வைப்பது. இதே உப்புமாவில் கொஞ்சம் நெய் மற்றும் காய்கறிகள் சேர்த்தால் அது தான் கிச்சடி! காலை உணவுக்கு கிச்சடி என்று சொல்லி பாருங்கள், நீங்கள் கூப்பிடுவதற்கு முன்னரே அனைவரும் டைனிங் டேபிளில் ஆஜராகி விடுவார்கள். காலை நேரத்தில் என்ன சமைப்பது என்பது பெரும் குழப்பமாக இருந்தால் மணம், சுவை, ஆரோக்கியம் நிறைந்த இந்த கிச்சடியை ட்ரை பண்ணலாம். இந்த கிச்சடி உங்கள் உணவு மெனுவில் நிச்சயம் நீங்கா இடம் பெற்று விடும்.

மசாலா கிச்சிடி | Masala Khichdi Recipe In Tamil

Print Recipe
காலை சிற்றுண்டி ஒருவருக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் பலரும் தங்களுக்கு இருக்கும் நேரமின்மையால் அதை உண்ணாமலே வெளியில் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் தயாரித்து சாப்பிடும் சிற்றுண்டி கிச்சடி ஆகும். தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான உணவுகளாக உள்ளன. இருப்பினும், எப்போதும் இட்லி, தோசை என சாப்பிட்டு சில நேரங்களில் நமக்கே போர் அடிக்கும். இதற்கு தீர்வு தரும்
Advertisement
சிறந்த காலை உணவு தேர்வாக கிச்சடி‌ உள்ளது. கிச்சடி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவாகும். கிச்சடிக்கு தேவையான விஷயங்களை தயாராக வைத்தால் போதும், டக்குனு 10 நிமிஷத்தில் காலை உணவை செய்திடலாம்.
Course Breakfast
Cuisine Indian
Keyword Masala Khichdi
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 3 People
Calories 224

Equipment

  • 1 கடாய்
  • 1 வாணலி

Ingredients

  • 1 கப் சேமியா
  • 1/2 கப் ரவை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 10 பீன்ஸ்
  • 1 கேரட்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 10 முந்திரி
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

Instructions

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், தக்காளி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், இஞ்சி, தக்காளி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் சேமியா, ரவை சேர்த்து வறுத்து அதனுடன் நெய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் சூடான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து, மல்லி இலை, முந்திரி, நெய் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மசாலா கிச்சிடி தயார். இதை தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 224kcal | Carbohydrates: 2.7g | Protein: 5g | Fat: 1.6g | Sodium: 33mg | Potassium: 186mg | Vitamin A: 66IU | Vitamin C: 34mg | Calcium: 13mg | Iron: 5.3mg

இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு இப்படி மசாலா ரவை இட்லி செய்து கொடுத்தால் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

12 நிமிடங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

29 நிமிடங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

36 நிமிடங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

4 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

14 மணி நேரங்கள் ago